தமிழ்நாடு

“பாஜகவை பகைத்து கொள்ள வேண்டாம்..” : செய்தியாளர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி! (VIDEO)

பா.ஜ.கவை பகைத்து கொள்ள வேண்டாம்; விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று பாஜகவின் சேலம் மாவட்ட செயலாளர் செய்தியாளர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

“பாஜகவை பகைத்து கொள்ள வேண்டாம்..” : செய்தியாளர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி! (VIDEO)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தி நகரிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர்களை அண்ணாமலை மிரட்டினார்.

மேலும் காயத்ரி ரகுராம் முதல் ரபேல் வாட்ச் வரை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் கடுப்பான அண்ணாமலை கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், அவர்களிடம் நீங்கள் எந்த செய்தி என்றும், உங்கள் பெயர் என்ன என்றும் மிரட்டினார். அதோடு அண்ணாமலை ஆத்திரப்பட அவருடன் இருப்பவர்களும் பத்திரிக்கையாளர்களிடம் சீறினார்கள்.

“பாஜகவை பகைத்து கொள்ள வேண்டாம்..” : செய்தியாளர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி! (VIDEO)

மேலும் அண்ணாமலை பத்திரிகையாளரது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தொடர்ந்து அவமானப்படுத்தியே வந்தார். சில யூடியூப் சேனல்கள் சார்பாக அவரிடம் கேள்விகேட்டபோது, "கேள்வி கேட்க நீங்கள் யார்? அப்படி ஒரு யூடியூப் சேனல் இருக்கிறதா? வெறும் 40 ஆயிரம் ரூபாய் கேமரா, மொபைல் போன் வைத்துக்கொண்டு லைக் வாங்குவதற்காகப் பேட்டியெடுக்க வந்துவிடுவதா?" என்று டிஜிட்டல் மீடியாவை அவமானப்படுத்தியுள்ளார்.

அதோடு கேள்வி கேட்பது யாராக இருந்தாலும் அவர்கள் பெயர், சேனல் பெயரையும் கூறிவிட்டு கேளுங்கள் என்று திமிரோடு கூறிய அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜகவை பகைத்து கொள்ள வேண்டாம் என்றும் பகைத்து கொண்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று பாஜகவின் சேலம் மாவட்ட செயலாளர் செய்தியாளர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, செய்தியாளர்களை தரக்குறைவாக பேசி அவர்களை விமர்சித்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் சரவணன் என்பவர் செய்தியாளர்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்து உள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, பேசிய செயலாளர் சரவணன் , பாஜகவிடம் பகைத்து கொள்ள வேண்டாம் என்றும் அவ்வாறு பகைத்து கொண்டால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் சேலம் மாவட்ட பாஜகவினர், வேறு மாதிரியான ஆட்கள் என்றும், செய்தியாளர்கள் கவனமாக இருங்கள் என்றும் மிரட்டும் தோரணையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாஜகவினரின் இந்த மிரட்டல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories