தமிழ்நாடு

புதுச்சேரியில் ஆசையாக புத்தாண்டு கொண்டாட வந்த உ.பி இளைஞர்.. இறுதியில் நேர்ந்த சோகம் !

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரியில் ஆசையாக புத்தாண்டு கொண்டாட வந்த உ.பி இளைஞர்.. இறுதியில் நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் இந்த புத்தாண்டை இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடினர். சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வந்து புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் ஆவாஜ் பிகார் காலனியை சேர்ந்த மகேஷா என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட எண்ணியுள்ளார். அதன்படி இவரும் இவரது நன்பர்கள் உட்பட 7 பேர் நேற்று புதுச்சேரிக்கு சென்றுள்ளனர்.

புதுச்சேரியில் ஆசையாக புத்தாண்டு கொண்டாட வந்த உ.பி இளைஞர்.. இறுதியில் நேர்ந்த சோகம் !

அப்போது விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கோட்டக் குப்பம் பகுதி அருகே தனியார் விடுதி எடுத்து தங்கி கொண்டாட்டத்தை தொடங்கினர். எனவே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக எழும்பிய ராட்சத அலை மகேஷாவை இழுத்து சென்றது. இதனை கண்ட அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கூச்சலிட்டு சுத்தம் போட்டனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மகேஷாவை மீட்க முயன்றனர். அதோடு அவரை கடலில் சென்று தேடினர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

புதுச்சேரியில் ஆசையாக புத்தாண்டு கொண்டாட வந்த உ.பி இளைஞர்.. இறுதியில் நேர்ந்த சோகம் !

இதனால் அவரது நண்பர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து மகேஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்த நிலீயல் சடலமாக மீட்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories