தமிழ்நாடு

“செம குளிர்.. மினி காஷ்மீர் போல் மாறிய நீலகிரி” : உறைபனி சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் குதூகலம்!

உதகையில் துவங்கியது உறை பனி பொழிவு ,இன்று அதிகாலை மினி காஷ்மீர்யாக மாறியது. உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.6 டிகிரியாக இருந்தது.

“செம குளிர்.. மினி காஷ்மீர் போல் மாறிய நீலகிரி” : உறைபனி சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் குதூகலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் நீர் பனி பொழியும், டிசம்பர் முதல் வாரத்தில் உறைபனி சீசன் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து காணட்டதால் உறைபனி பொழிவு டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கியது.

மேலும் மீண்டும் மழை காணப்பட்டதால் உறை பனி பொழிவு காணபடவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பகலில் அதிக அளவில் வெயில் காணபட்ட நிலையில், காலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.

இதனால் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் உறை பனி பொழிவு துவங்கியுள்ளது. குறிப்பாக உதகை குதிரை பந்தய மைதானம், காந்தல், அரசு தாவரவியல் பூங்கா, தலை குந்தா ஆகிய பகுதிகளில் உறை பனி பொழிவு காணபட்டது.

“செம குளிர்.. மினி காஷ்மீர் போல் மாறிய நீலகிரி” : உறைபனி சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் குதூகலம்!

பசும் புல்வெளிகளில் வெள்ளை நிறத்தில் பனி பொழிவு காணபட்டதால் உதகை மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது. இதனால் உதகையில் இன்று பெய்த கடும் உறை பனி பொழிவால் கடுங்குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

மேலும் காலை நேரங்களில் 9 மணிக்கு மேல் நன்றாக வெயில் வந்தவுடன் வீட்டை விட்டு வெளியே வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உதகையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.5 டிகிரி செல்சியல்சாக பதிவாகியுள்ளது மேலும் தாழ்வான இடங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்னும் வரும் நாட்களில் நகர்ப்புறங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதகையில் நிலவி வரும் கடும் உறை பனிப்பொழிவு காரணமாக அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு அரங்கில் தடகள பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் எண்ணிக்கை குறைந்த அளவே காணப்பட்டது. இருந்தாலும் சில விளையாட்டு வீரர்கள் ஸ்வட்டர், தொப்பி உள்ளிட்டவைகளை அணிந்து பயிற்சிகளை மேற்கொண்டனர்.

banner

Related Stories

Related Stories