தமிழ்நாடு

“வதந்திகளை நம்ப வேண்டாம்..” - ஆவின் பால் விலை உயர்வு என வெளியான போலி செய்திக்கு நிர்வாகம் விளக்கம் !

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் நாளை முதல் அரை லிட்டருக்கு 2 ரூபாய் விலை ஏறுவதாக பரவிய பொய் செய்திக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

“வதந்திகளை நம்ப வேண்டாம்..” - ஆவின் பால் விலை உயர்வு என வெளியான போலி செய்திக்கு நிர்வாகம் விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான இடு பொருட்களான கலப்புத் தீவனத்தையும் மற்றும் கால்நடைமருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக வழங்கி வருகிறது.

“வதந்திகளை நம்ப வேண்டாம்..” - ஆவின் பால் விலை உயர்வு என வெளியான போலி செய்திக்கு நிர்வாகம் விளக்கம் !

கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32/-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41/-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. நுகர்வோர்களின் நலன் கருதி, கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய்.3/- குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால்கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும். இச்சூழ்நிலையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர்.

“வதந்திகளை நம்ப வேண்டாம்..” - ஆவின் பால் விலை உயர்வு என வெளியான போலி செய்திக்கு நிர்வாகம் விளக்கம் !

அக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து இடுபொருட்களின் விலை உயர்வையும், கடந்த மூன்று ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததையும், கிராமப்பொருளாதார முன்னேற்றத்தில் பால் உற்பத்தியளார்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டும் பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி, ரூபாய்.32/-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி ரூபாய்.41/-லிருந்து ரூபாய் 44 ஆகவும் 05.11.2022 தேதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

“வதந்திகளை நம்ப வேண்டாம்..” - ஆவின் பால் விலை உயர்வு என வெளியான போலி செய்திக்கு நிர்வாகம் விளக்கம் !

தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ள பாலின் விலை பட்டியலின் படி, இல்லங்களில் நுகர்வோர் பயன்படுத்தும் சமன்படுத்தப்பட்டபால் (Toned Milk) (நீலவண்ண பாக்கெட்டில் வழங்கப்படுவது) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) (பச்சைவண்ண பாக்கெட்டில் வழங்கப்படுவது) ஆகியவற்றின் விலையில் எவ்விதமாற்றமின்றி பழைய விலையே தொடர்கிறது.

நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.46-க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனையில் நிறைகொழுப்பு பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்) விலை நவ. 5 முதல் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு, ரூ.60-ஆக மாற்றியமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

“வதந்திகளை நம்ப வேண்டாம்..” - ஆவின் பால் விலை உயர்வு என வெளியான போலி செய்திக்கு நிர்வாகம் விளக்கம் !

இந்த நிலையில் பிரபல தனியார் ஊடகம் ஒன்று, ஆவின் பச்சை நிற பால், நாளை முதல் விலையேற்றவுள்ளதாக போலியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆவின் பச்சை நிற பால் தற்போது ரூ.22 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் ரூ.2 அதிகரித்து 24 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளதாக தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.

“வதந்திகளை நம்ப வேண்டாம்..” - ஆவின் பால் விலை உயர்வு என வெளியான போலி செய்திக்கு நிர்வாகம் விளக்கம் !

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், இது அச்சு பிழை என்று விளக்கமும் அளித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பால் பாக்கெட்டுகள் மீது அச்சிடப்படும் விலை அச்சு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு (coding error) காரணமாக பால் பாக்கெட் களின் மீது சரியான விலைக்கு பதிலாக வேறு விலை அச்சாகி விட்டது. அதுதானே தவிர ஆவின் பால் பாக்கெட்டுகள் எவ்வித விலை மாற்றமும் இல்லை; விலை உயர்வும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

“வதந்திகளை நம்ப வேண்டாம்..” - ஆவின் பால் விலை உயர்வு என வெளியான போலி செய்திக்கு நிர்வாகம் விளக்கம் !

இந்த தவறு உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது இதற்கு காரணமான உரிய அதிகாரிகள் மீது துறைரீதியான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் ஆவின் பால் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

banner

Related Stories

Related Stories