தமிழ்நாடு

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி.. கதறிய தாய்.. துரிதமாக செயல்பட்டு கைப்பற்றிய இளைஞர் !

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை துரிதமாக செயல்பட்டு இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி.. கதறிய தாய்.. துரிதமாக செயல்பட்டு  கைப்பற்றிய இளைஞர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது குற்றால அருவி. இங்கு புது குற்றாலம், மெயின் அருவி, பழைய குற்றாலம் என பல அருவிகள் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பருவமழை காரணமாக குற்றால அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தற்போது குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆங்காங்கே பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி.. கதறிய தாய்.. துரிதமாக செயல்பட்டு  கைப்பற்றிய இளைஞர் !

இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வந்துள்ளனர். அப்போது பெண் ஒருவர் தனது பெண் குழந்தையுடன் குளித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த குழந்தை தடாகத்தில் திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி.. கதறிய தாய்.. துரிதமாக செயல்பட்டு  கைப்பற்றிய இளைஞர் !

இதனை கண்ட குழந்தையின் தாயும், அருகிலிருந்தவர்களும் கத்தி கூச்சலிட்டனர். அதோடு குழந்தையை மீட்க அங்கிருந்தவர்கள் தீவிரமாக முயன்றனர். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் குழந்தையை அடித்து செல்லப்படும் இடத்திற்கு துணிச்சலாக சென்றார். அப்போது சிறுமி ஒரு பாறையின் இடுக்கில் பிடித்துக் கொண்டு நின்றாள். அந்த இளைஞர் அங்கு சென்று குழந்தையை தூக்கி கொண்டு மேலே வந்தார்.

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி.. கதறிய தாய்.. துரிதமாக செயல்பட்டு  கைப்பற்றிய இளைஞர் !

பின்னர், அங்கு வந்த பதறியடித்து வந்த அந்த குழந்தையின் தாய், தனது குழந்தை தான் என்று கூறி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறுமியை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தையை துரிதமாக செயல்பட்டு மீட்ட இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக காணப்படுகிறது.

banner

Related Stories

Related Stories