தமிழ்நாடு

அண்ணாமலை வருகையும் ஆபாச வீடியோவும் - பாஜகவை கலங்கடிக்கும் பாலியல் சர்ச்சை.. அடுத்து சிக்கப்போவது யார்?

தமிழக பாஜகவிற்கு அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகே, ஆடியோ - வீடியோ கலாச்சாரம் உருவானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்ணாமலை வருகையும் ஆபாச வீடியோவும் - பாஜகவை கலங்கடிக்கும் பாலியல் சர்ச்சை.. அடுத்து சிக்கப்போவது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் பாஜக ஊடுருவியதில் இருந்தே பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன், ஒன்றிய இணையமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து, அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பதவி ஏற்றதில் இருந்தே பல சச்சரவுகள் அரங்கேறி வருகிறது.

குறிப்பாக பெண்கள் விஷயத்தில் சொல்லவே வேண்டாம். ஆபாசம், அட்டூழியம், அலுச்சாட்டியம் என பாஜகவின் செயல்பாடுகள் தலைவிரித்தாடுகிறது. முன்னதாக பெண்கள் விஷயத்தில் நாட்டில் இருக்கும் மற்ற பாஜக தலைவர்கள் பலரும் சிக்கினர். ஆனால் தமிழகத்தில் அண்ணாமலை பொறுப்பேற்றதையடுத்துதான் பாஜகவில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

அண்ணாமலை வருகையும் ஆபாச வீடியோவும் - பாஜகவை கலங்கடிக்கும் பாலியல் சர்ச்சை.. அடுத்து சிக்கப்போவது யார்?

அதில் முதலாவதாக சிக்கியது தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆபாச வீடியோ கால்தான். கே.டி.ராகவன் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசும் வீடியோ, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மதன் என்பவர் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டார்.

இது பெரும் சர்ச்சையான நிலையில் கே.டி.ராகவனுக்கு பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்தது. 'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்று சொல்வது போல், தான் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றே தன்னை பிரதிபலித்துக்கொண்டார். எனினும் இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களிலேயே, தான் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு இதனை வெளியிட்ட மதனும், தன்னிடம் கே.டி.ராகவன் வீடியோவை தவிர, 12 பேரின் வீடியோக்கள் உள்ளது என்றும் கூறியிருந்தார்.

அண்ணாமலை வருகையும் ஆபாச வீடியோவும் - பாஜகவை கலங்கடிக்கும் பாலியல் சர்ச்சை.. அடுத்து சிக்கப்போவது யார்?

இந்த சர்ச்சையே இன்னும் ஓயாமல் இருக்கும் நிலையில், 'போன வருஷம் ஒன்னு தான்.. ஆனா இந்த வருஷம்..' என்பது போல், அதிகமான சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது பாஜக. அதுவும் பெண்கள் சர்ச்சைகளுக்கு எல்லைகளே இல்லை என்றே கூறலாம்.

அந்த வகையில் சிறுபான்மை அணி தலைவராக நியமிக்கப்பட்ட டெய்சிக்கும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளர் சூர்யாவுக்கும் அண்மையில் பெரிய பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக சூர்யா, டெய்சியை ஆபாச வார்த்தைகளால் வசைபாடினார். அதோடு ஒரு பெண்ணை எவ்வளவு கீழ்த்தரமாக பேசக்கூடாதோ அதை விட மோசமாக பேசினார்.

அண்ணாமலை வருகையும் ஆபாச வீடியோவும் - பாஜகவை கலங்கடிக்கும் பாலியல் சர்ச்சை.. அடுத்து சிக்கப்போவது யார்?

இது தொடர்பான ஆடியோவை டெய்சி வெளியிட, மீண்டும் பாஜகவுக்கும் ஆடியோ - வீடியோ கலாச்சாரம் இருக்கிறது என மக்களுக்கு நினைவு படுத்தியது. இது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதனை அருவருக்கத்தக்க வகையில் பார்த்தனர். அதே நேரத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் இந்த சம்பவத்திற்கு சூர்யா மீது கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை, இருவருக்கும் ஒரு ரகசிய கூட்டத்தை கூட்டி பேசினார். அவர் என்ன பேசினாரோ என்று தெரியவில்லை, உடனே வெளியே வந்து செய்தியாளர்கள் சந்திப்பை கூட்டி "நாங்கள் இருவரும் அக்கா - தம்பி" என்று சொல்லி விட்டார்கள். அதோடு இனி அக்கா - தம்பி உறவாகவே எங்களுக்குள் இருக்கும் உறவு தொடரும் என இருவரும் கூறினர்.

அண்ணாமலை வருகையும் ஆபாச வீடியோவும் - பாஜகவை கலங்கடிக்கும் பாலியல் சர்ச்சை.. அடுத்து சிக்கப்போவது யார்?

இவர்களது இந்த பேச்சு நெட்டிசன்களுக்கு அல்வா சாப்பிட்டது போல், இதனை தங்களுக்கு சாதகமாகி கன்டென்ட் உருவாக்கி பாஜகவினர் வீட்டில் அக்கா, தம்பி இப்படித்தான் பேசுவார்களா என்றும், பாஜகவில் உறவுமுறைகளை இப்படித்தான் பார்க்கிறதா என்றும் விமர்சித்து, மீம்ஸ்களை பதிவிட்டும் வந்தனர். இது ஒருபுறம் இருக்க, "அந்த பக்கம் போகாத னு சொன்னேனே கேட்டியா..?" என்று வடிவேலு காமெடி போல், தப்பை தட்டி கேட்ட காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்தார்.

இது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காயத்ரி ரகுராம், தான் நீக்கப்பட்டதற்கான காரணங்களை தெரிய அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். முன்பெல்லாம் மாற்றுக்கட்சியினரை திட்டவே நேரம் இல்லாத காயத்ரி ரகுராம், தற்போது சொந்த கட்சியை (தமிழ்நாடு பாஜக) திட்டுவதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்காமல் இதற்காகவே தனது நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை வருகையும் ஆபாச வீடியோவும் - பாஜகவை கலங்கடிக்கும் பாலியல் சர்ச்சை.. அடுத்து சிக்கப்போவது யார்?

காயத்ரி ரகுராம் ஒரு புறம் இருக்க, மறுப்புறம் மீண்டும் சூர்யா ஆபாச வீடியோ தொடர்பான மற்றொரு சர்ச்சையை கிளப்பினார். அதாவது சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சூர்யா, பாஜகவின் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகிய இருவர் மீதும் சில சர்ச்சைக்குறிய குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அதோடு அலிஷாவிடம் பணம் கேட்டு அமர் பிரசாத் மிரட்டுவதாகவும், இதில் சில வீடியோக்களை எடுத்து மிரட்டுவதாகவும் கூறினார். சூர்யா இடையே பிரச்னைகள் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் பல வந்த நிலையில்தான் அலிஷா - அமர் பிரசாத் இடையே மோதல் இருப்பதாக சூர்யா பேசியிருந்தார்.

அண்ணாமலை வருகையும் ஆபாச வீடியோவும் - பாஜகவை கலங்கடிக்கும் பாலியல் சர்ச்சை.. அடுத்து சிக்கப்போவது யார்?

இதையடுத்து இதுகுறித்து விளக்கமளித்த அலிஷா, "சூர்யாதான் என்னிடம் வந்து நீங்கள் சிறிய ஆடை அணிய வேண்டாம். ஜிம்மிற்கு செல்லும் போது சின் உடை அணிந்து செல்லாதீர்கள். புடவை கட்டும் விதம் சரியாக இல்லை. கட்சியில் உங்களை பற்றித்தான் தவறாக பேசுவார்கள். உங்கள் வயிறு சரியில்லை என்று கூறினார்.

மேலும் என் உடல் உறுப்புகள் பற்றி கிண்டல் செய்தார். நான் இதை பற்றி அண்ணாமலையிடம் பேசியதற்கு... நான் அப்படி யாரையும் அனுப்ப வில்லையே என்று கூறினார். சூர்யா என்னை பாடி ஷெமிங் செய்தார். அதை பற்றி கட்சிக்குள் புகார் கொடுத்துள்ளேன் என்று அலிஷா அப்துல்லா கூறியுள்ளார். அவர் மோசமாக பேசியதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது" என்று மீண்டும் பாஜகவில் வீடியோ - ஆடியோ கலாச்சாரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே தமிழக பாஜகவிற்கு அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகே, ஆடியோ - வீடியோ கலாச்சாரம் உருவானதாகவும், இதுகுறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும் எனவும் காயத்ரி ரகுராம் பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார். மேலும் இது தொடர்பாக கட்சி மேலிடத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். அதோடு, தன்னை நீக்கியதற்கான சரியான காரணத்தை இன்னும் விளக்கவில்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குமுறி வருகிறார்.

அண்ணாமலை வருகையும் ஆபாச வீடியோவும் - பாஜகவை கலங்கடிக்கும் பாலியல் சர்ச்சை.. அடுத்து சிக்கப்போவது யார்?

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காயத்ரி ரகுராம், தன்னை பற்றி அண்ணாமலை துபாய் ஹோட்டலில் 150 பேர் முன்னிலையில் கேவலமாகப் பேசியதாக குற்றம்சாட்டினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்ட காயத்ரி, " அண்ணாமலை சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளதால், அவர் தற்போது பொய் சொல்ல முடியாது. துபாய் ஹோட்டலில் என்னைப் பற்றி 150 பேர் முன்னிலையில் கேவலமாகப் பேசினீர்களே அந்த உண்மையை ஒப்புக்கொள்ள போகிறீர்களா? அல்லது பகிரங்கமாக மறுக்க போகிறீர்களா?' என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு தன்னிடம் அனைத்திற்குமான ஆதாரங்கள் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பாஜகவில் தொடர்ந்து வீடியோ கலாச்சாரம் உள்ளது என்று மக்களுக்கு ஆழமாக புரியவைக்கப்படுகிறது. அதோடு பாஜகவில் அடுத்தது யார் வீடியோ வெளியாகும் என்று பாஜக தலைவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டது போல, பீதியில் உறைந்து போய்யுள்ளனர். சொந்த காசில் சூனியம் வைப்பது என்றால் இதுதான் என நெட்டிசன்களும் கிண்டலடித்து வருகின்றனர்.

எனினும் எதிரியை நடுவில் நிறுத்தி, வட்டமாக நின்று கண்களை கட்டி தாக்குவது போல், தங்களை தாங்களே தாக்கி கொள்ளும் பாஜகவினரை நினைத்தால் ஒரு புறம் சிரிப்பாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் அண்ணாமலைதான் மூலக்காரணம் என்று பாஜகவினர் கூறி வருவது அனைவர் மத்தியிலும் ஒரு அருவருப்பு தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

Related Stories