தமிழ்நாடு

மனைவியை பழிவாங்க 2 மணி நேரம் போலிஸாரை அலையவிட்ட கணவன்: தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மனைவியை பழிவாங்க 2 மணி நேரம் போலிஸாரை அலையவிட்ட கணவன்: தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குருவாயூரில் இருந்து சென்னை எக்மோர் நோக்கி வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் காவல் கட்டுப்பாடு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோப்பநாய் டயானா உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே போலிஸார் 2 மணி நேரம் சோதனை செய்தும் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த தடையமும் கிடைக்கவில்லை. பின்னர்தான் செல்போனில் வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது.

மனைவியை பழிவாங்க 2 மணி நேரம் போலிஸாரை அலையவிட்ட கணவன்: தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?

இதையடுத்து யார் இந்த தகவலை சொன்னது என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில், வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் எனப்வர் தனது மனைவி சாந்தி பிரிந்து சென்றதால் அவரை பழிவாங்க மதுபோதையில் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories