தமிழ்நாடு

வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்.. களத்தில் இறங்கும் ரேஷன் கடை ஊழியர்கள் !

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 மற்றும் அரிசி, சர்க்கரை பெறுவதற்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக சென்றுவரும் 27ஆம் தேதி முதல் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்.. களத்தில் இறங்கும் ரேஷன் கடை ஊழியர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை அடுத்த மாதம் வரும் ஜனவரி 02ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, அதேநாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொது மக்களுக்கு வழங்க உள்ளனர்.

அந்த வகையில், ரூ.1000-த்துடன் கூடிய பொங்கல் பரிசு தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே வரும் 27ம் தேதி முதல் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்.. களத்தில் இறங்கும் ரேஷன் கடை ஊழியர்கள் !

தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த நாளில், இந்த குடும்பத்துக்கு பொங்கல் பரிசு மற்றும் பொருட்கள் வழங்கப்படும் என்ற விவரங்கள் விபர பலகை மூலமாக தெரியப்படுத்தப்படும்

பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்காக பயனாளர்கள் ஒரே நேரத்தில் கூடி, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது. 13ம் தேதி போகிப் பண்டிகை தொடங்குவதற்கு முன்பு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசு வழங்கி முடிக்க பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

banner

Related Stories

Related Stories