தமிழ்நாடு

செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. நண்பர்கள் கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்!

செல்ஃபி எடுக்கும் போது கொசஸ்தலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. நண்பர்கள் கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம், ஆரிக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து திருக்கண்டலம் தடுப்பணை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது நவீன்குமார் தனது செல்போனில் அங்கிருந்த அழகிய காட்சிகளைப் படம் எடுத்துள்ளார். மேலும் செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது திடீரென நவீன்குமார் தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார்.

செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. நண்பர்கள் கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்!

இதைப்பார்த்து அவரது நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். மேலும் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் ஆற்றில் விழுந்த நவீன்குமார் அடித்துச் செல்லப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து போலிஸார், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் அங்கு வந்தனர்.

செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. நண்பர்கள் கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்!

பின்னர் 10 பேர் கொண்ட மீட்புக்குழு ஆற்றில் இறங்கி டிரோன் கேமரா உதவியுடன் நவீன்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவீன்குமார் நண்பர்கள் கண்முன்னே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories