தமிழ்நாடு

திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மற்றொரு மகுடம்.. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்: India Today தகவல்!

இந்தியாவில் ஒட்டு மொத்த மாநிலங்களின் செயல்பாட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக இந்தியா டுடே ஆங்கில வார இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மற்றொரு மகுடம்.. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்: India Today தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு அனைத்திலும் வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இருளில் இருந்த தமிழ்நாட்டை மீட்டு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க அரசின் இந்த ஒன்றரை ஆண்டுகளில், கொரோனா காலத்தில் ரூ.4000 நிதியுதவி, பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், இலவச மின்சார திட்டம், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை என அனைத்து மக்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறது.

திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மற்றொரு மகுடம்.. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்: India Today தகவல்!

மேலும் கனமழை, புயல் போன்ற காலத்திலும் தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களிடம் பாராட்டை பெற்றது. அண்மையில் ஏற்பட்ட மாண்டஸ் புயலின் போது கூட, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்திருந்ததால்தான் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இப்படி திட்டமாக இருந்ததாலும் சரி, பேரிடர் காலமாக இருந்தாலும் சரி எதையும் திரண்பட செயல்படுத்தி காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், இந்தியாவில் ஒட்டு மொத்த மாநிலங்களின் செயல்பாட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக இந்தியா டுடே ஆங்கில வார இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மற்றொரு மகுடம்.. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்: India Today தகவல்!

இந்தியா டுடே ஆங்கில நாளேடு ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் பெரிய மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் என இரண்டு பிரிவுகளாக பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்தியாவில் உள்ள மாநிலங்களை கல்வி, பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம், நிர்வாகம், சுற்றுலா, தொழில், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளை 12 பிரிவுகளாக பிரித்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதி ஆயோக், பொருளாதார நிபுணர்கள், மிகச்சிறந்த கல்வியாளர்கள் உள்ளிட்டோரின் நம்பகதன்மை வாய்ந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 12 பிரிவுகளில் 9 பிரிவுகளில் தமிழ்நாடு முன்னிலை பெற்று ஒட்டுமொத்த செயல்பாட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அதன்படி, மாநிலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்தாண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பொருளாதாரத்தில் 4வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. இதேபோன்று, உள்கட்டமைப்பில் கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்தாண்டு 3வது இடத்துக்கும், சுகாதாரத்தில் 5வது இடத்திலிருந்து 3வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.

திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மற்றொரு மகுடம்.. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்: India Today தகவல்!

கல்வியில் ஐந்தாவது இடத்திலிருந்து நான்காவது இடத்துக்கும், சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் நான்காவது இடத்துக்கும் தமிழ்நாடு முன்னேறியுள்ளது. நிர்வாகத்தில் கடந்த ஆண்டு எட்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 6வது இடத்தை பிடித்துள்ளது. தூய்மையை கடைப்பிடிப்பதில் கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், புயல் மற்றும் மழை பாதிப்புகளின்போது தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும் இந்தியா டுடே ஆங்கில நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories