தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை: வதந்தி பரப்பும் கும்பலுக்கு இது தெரியுமா? - சென்னை மாநகராட்சி விளக்கம்!

மாற்றுத்திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் பரிந்துரைப்படி மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை: வதந்தி பரப்பும் கும்பலுக்கு இது தெரியுமா? - சென்னை மாநகராட்சி விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக கடல் அலைகளை கண்டு ரசிக்கும் படி பிரத்யேகமாக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரப்பாதையை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளிகளுடன் கடல்பரப்பு வரை சென்று மாற்றுத்திறனாளிகள் கடல் நீரில் கால் நனைப்பதை கண்டு மகிழ்ந்தார். மேலும் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை: வதந்தி பரப்பும் கும்பலுக்கு இது தெரியுமா? - சென்னை மாநகராட்சி விளக்கம்!

சென்னை மெரினா கடற்கரை உயிர்கோலப்பகுதியாக திகழ்வால் நிரந்தர நடைபாதை அமைக்க முடியாத சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில் 1.15 கோடி நிதியில் பிரத்தோயகமாக மரப்பாதை அமைக்கப்பட்டது. இந்த மரப்பாதையானது சூழலில் காரணங்களால் எளிதில் மாற்றி அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டனர்.

இந்நிலையில் சென்னையில் பலத்தக் காற்றுடன் மாண்டஸ் புயல் வீசி வருகிறது. இந்த புயலால் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சேதமானது. அதாவது, மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் சரியான தரத்தில் இல்லை என்றும் சிலர் அவதூறு பரப்புகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை: வதந்தி பரப்பும் கும்பலுக்கு இது தெரியுமா? - சென்னை மாநகராட்சி விளக்கம்!

ஆனால் உண்மை என்னவெனில், மொத்தம் 380 மீட்டர் நீளமுள்ள நடைபாதையில் கடலுக்கு மிக அருகில் உள்ள பகுதியின் முனை மட்டும் அதீத காற்று, சீற்றமான கடல் அலையால் சேதமடைந்துள்ளது. நடைபாதையின் மற்ற பகுதிகளில் சேதம் ஏதுமில்லை.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று ஆய்வு செய்தனர். ஒப்பந்ததாரர் இன்னும் குறைபாடு பொறுப்புக் காலத்திற்கு உள்ளேயே இருக்கிறார். எனவே பாதையை சரிசெய்வதற்கான செலவுகளை ஒப்பந்ததாரரே ஏற்றுக் கொள்வார் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை: வதந்தி பரப்பும் கும்பலுக்கு இது தெரியுமா? - சென்னை மாநகராட்சி விளக்கம்!

இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் பரிந்துரைப்படி மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்கு பாதிக்காத வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மரப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இவை தற்காலிக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கடுமையான வானிலை மற்றும் கடல் சூழ்நிலைகளில் பலகைகள் அகற்றப்படுவது இயல்பானது.

இயற்கை சீற்றத்திற்குப் பிறகு எளிதாக சரிசெய்யக்கூடிய வகையில் இந்த அமைப்பு திட்டமிடப்பட்டது. அதிக அலைகள் காரணமாக கடல் 20 மீட்டர் உள்நோக்கி வந்துள்ளது, மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது, அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். புயலுக்குப் பிறகு இந்த மரச் சரிவு சரிசெய்யப்பட்டு, அப்படியே வைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories