தமிழ்நாடு

போட்டியின் நடுவே வந்த சேதி: தங்கப்பதக்கத்தை வைத்து தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீராங்கனை!

நியூஸ்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுத்துக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவுடன் தந்தையை இழந்த வீராங்கனை பதக்கத்துடன் ஊர் திரும்பிய நிலையில் தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

போட்டியின் நடுவே வந்த சேதி: தங்கப்பதக்கத்தை வைத்து தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீராங்கனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லுகாரண்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுத்து. பெயிண்டரான இவருக்கு ரீட்டா என்ற மனைவியும் லோகப்பிரியா, பிரியதர்ஷினி மற்றும் பிரியங்கா என்ற மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் செல்வமுத்துவிற்கும் அவரது மனைவி ரீட்டாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்களது மகள்‌ லோகப்பிரியாவிற்கு மூன்று வயது இருக்கும்போதே தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசிக்கத் தொடங்கினர். பின்னர் செல்வமுத்து அவ்வப்போது பட்டுக்கோட்டைக்கு சென்று அவரது மகள்களை சந்தித்து சென்று வந்துள்ளார்.

போட்டியின் நடுவே வந்த சேதி: தங்கப்பதக்கத்தை வைத்து தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீராங்கனை!

லோகப்பிரியாவின் தாயார் ரீட்டா தனது மகள்களை நன்றாக படிக்க வைத்து சிறந்த முறையில் வளர்க்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தோடு, கழிவறையில் வசூல் செய்யும் பெண்ணாக பணிபுரிந்து அவரது மூன்று மகள்களையும் படிக்க வைத்து வந்துள்ளார்.

ஏழ்மையான நிலையிலும் லோகப்பிரியா பட்டுக்கோட்டையில் உள்ள பயிற்சியாளர் ரவிச்சந்திரனிடம் பயிற்சி பெற்று வலுத்தூக்கும் வீராங்கனையாக உருவெடுத்து, பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் மூன்று முறை தேசிய அளவில் பதக்கமும், இரண்டு முறை இரும்பு பெண்மணி என்ற பட்டமும் பெற்றுள்ளார் லோகப்பிரியா.

போட்டியின் நடுவே வந்த சேதி: தங்கப்பதக்கத்தை வைத்து தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீராங்கனை!

இந்நிலையில், நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 52 கிலோ எடையில் ஜூனியர் பிரிவில் 350 கிலோ எடையை தூக்கி லோகப்பிரியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். தங்கப்பதக்கம் வென்று சிறிது நேரத்திலேயே கல்லுக்காரண்பட்டியில் உள்ள அவரது தந்தை செல்வமுத்து உயிரிழந்து விட்டார் என்ற செய்தி லோகப்பிரியாவின் செவிக்கு சென்றதால் சோகத்தில் மூழ்கிய அவர் செய்வதறியாமல் தவித்தார்.

இதன் பின்னர் அவரை சக வீராங்கள் தேற்றிய நிலையில், இன்று பதக்கத்துடன் கல்லுக்காரண்பட்டிக்குச் சென்ற லோகப்பிரியா தனது தந்தை செல்வமுத்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையில் பதக்கம் வென்று ஊர் திரும்பிய வீராங்கனை லோகப்பிரியாவிற்கு அந்த கிராமத்தினர் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

போட்டியின் நடுவே வந்த சேதி: தங்கப்பதக்கத்தை வைத்து தந்தைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீராங்கனை!

இதன் பின்னர் லோகப்பிரியாவும் அவரது பயிற்சியாளர் ரவிச்சந்திரனும் புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்லத்தில் அவரை சந்தித்து காமன்வெல்த்தில் வாங்கிய பதக்கத்தை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

பின்னர் தான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு அரசு வேலை வழங்கவும் பசிப்பதற்கு வீடு கூட இல்லாததால் வீடு வழங்கவும் அமைச்சர் ரகுபதியிடம் வீராங்கனை லோகப்பிரியா கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அமைச்சர் எஸ்.ரகுபதி தங்கள் கோரிக்கையை தமிழக முதலமைச்சரிடம் எடுத்துக் கூறி தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

banner

Related Stories

Related Stories