தமிழ்நாடு

“அதிமுகவின் உட்கட்சி பூசல்.. எடப்பாடி ஆளுநரை சந்தித்த காரணம் இதுதான்”: கடுமையாக சாடிய அமைச்சர் பொன்முடி!

“அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசலை தீர்க்கவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்தார்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

“அதிமுகவின் உட்கட்சி பூசல்..  எடப்பாடி ஆளுநரை சந்தித்த காரணம் இதுதான்”: கடுமையாக சாடிய அமைச்சர் பொன்முடி!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேம்பி ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விவசாயிகளின் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சரும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள், விவசாயக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா சிறப்புரையாற்றினார்.

“அதிமுகவின் உட்கட்சி பூசல்..  எடப்பாடி ஆளுநரை சந்தித்த காரணம் இதுதான்”: கடுமையாக சாடிய அமைச்சர் பொன்முடி!

விழாவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தரிசு நிலங்களை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என இந்த பயிற்சியின் மூலம் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த போது, “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் உள்ள உட்கட்சி பூசலை தீர்க்க வேண்டி ஆளுநரை சந்தித்தார்.

“அதிமுகவின் உட்கட்சி பூசல்..  எடப்பாடி ஆளுநரை சந்தித்த காரணம் இதுதான்”: கடுமையாக சாடிய அமைச்சர் பொன்முடி!

ஆனால் மக்கள் மத்தியில் தி.மு.க.வின் மீது வீண்பழி சுமத்துகிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு சரியில்லாத காரணத்தினால் தான் அ.தி.மு.க.வை புறக்கணித்து, மக்கள் திமுகவை ஆதரித்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினை கொண்டு வந்துள்ளனர்” என அவர் பதிலளித்தார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 6,000 லிட்டர் தரிசு நிலங்கள் உள்ளதாகவும் இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயிர் செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories