தமிழ்நாடு

தீபாவளிக்கு இனிப்பு.. கிறிஸ்துமஸ்-க்கு கேக்.. 4 வகையான கேக்குகளை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் திட்டம்!

கிறிஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி 4 வகையாக கேக் வகைகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

தீபாவளிக்கு இனிப்பு..  கிறிஸ்துமஸ்-க்கு கேக்.. 4 வகையான கேக்குகளை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்ததிலிருந்து ஆவின் நிறுவனத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் கோல்டு காஃபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு உள்ளிட்ட 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்தது.

மேலும், இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி, மற்றும் வகைப்படுத்தப்பட்ட சிறப்பு இனிப்பு வகைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தீபாவளிக்கு இனிப்பு..  கிறிஸ்துமஸ்-க்கு கேக்.. 4 வகையான கேக்குகளை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் திட்டம்!

அதேபோல், குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே வைத்திருந்தால் கூட 90 நாட்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் பாலை ஆவின் நிறுவனம் (ஆவின் டிலைட்) அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய புதிய முயற்சிகளை எத்து நுகர்வோர்களைக் கவர்ந்து வருகிறது.

தீபாவளிக்கு இனிப்பு..  கிறிஸ்துமஸ்-க்கு கேக்.. 4 வகையான கேக்குகளை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் திட்டம்!

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி 4 வகையான கேக்குகளை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வெண்ணிலா, சாக்லெட் உள்ளிட்ட பிளேவர்களில் தயாராகும் கேக்குகளை இந்த மாதமே விற்பனைக்குக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் உள்ளத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories