தமிழ்நாடு

ஒரே பைக்கில் அதிவேகத்தில் சென்ற 3 மாணவர்கள்.. ஸ்கைவாக் மேம்பால சுவற்றில் மோதி ஒருவர் பரிதால பலி !

சென்னை ஸ்கைவாக் மேம்பாலச் சுவற்றில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஆலன் ஜெர்மான்ஸ் (21). இவர் சென்னை முகப்பேர் பகுதியில் நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி வருகிறார்.

இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் இன்று அதிகாலை கோவளம் கடற்கரைக்கு சென்று சூரிய உதயம் பார்க்க ஆலன் ஜெர்மான்ஸ் உள்ளிட்ட 3 நண்பர்களுடம் ஒரே பைக்கில் சென்றுள்ளனர்.

ஒரே பைக்கில் அதிவேகத்தில்  சென்ற 3 மாணவர்கள்.. ஸ்கைவாக் மேம்பால சுவற்றில் மோதி ஒருவர் பரிதால பலி !

அதிகாலை நேரம் என்பதால் சாலையில் விரிச்சோடி இருந்தநிலையில், ஆலன் பைக்கை வேகமாக இயக்கியுள்ளார். அதிவேகத்தில் மூன்று பேரும் பைக்கில் சென்றுக்கொண்டிருந்த நிலையில், சென்னை அண்ணா நகர் அருகே உள்ள ஸ்கைவாக் மேம்பாலத்தில் வேகமாக சென்றுள்ளனர்.

அப்போது அதிவேகத்தில் சென்ற பைக்கின் கட்டுப்பாட்டை இழந்த ஆலன் பைக்கை பாலத்தின் சுவற்றின் மீது பலமாக மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஆலன் ஜெர்மான்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரே பைக்கில் அதிவேகத்தில்  சென்ற 3 மாணவர்கள்.. ஸ்கைவாக் மேம்பால சுவற்றில் மோதி ஒருவர் பரிதால பலி !

இதனிடையே சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைட்தனர். இதில் பின்னால் அமர்ந்த நண்பர்கள் தருண் வயது(21), பிரமோத் (21) காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் அறிந்துவந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த மாணவனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக்கில் வேகமாக சென்று மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories