தமிழ்நாடு

பாஜக ஆளும் மாநிலங்களில் மது வருமானம் ₹.1 லட்சம் கோடி: வாய் இருக்குனு இஸ்டத்துக்கு.. அண்ணாமலை கவனத்திற்கு!

தமிழகத்தில் மட்டும்தான் மதுபானம் அதிகளவில் விற்கப்படுவது போலவும், இதற்கென்று ஒரு அமைச்சரை நியமித்து இருப்பது போலவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மது வருமானம் ₹.1 லட்சம் கோடி: வாய் இருக்குனு இஸ்டத்துக்கு.. அண்ணாமலை கவனத்திற்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘ஹே தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்’ என்ற பாடலை கேட்டாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சரக்குதான். தனியார்கள் சிலரால் நடத்தப்பட்டு வந்த இந்த மதுபான பிசினஸ், காலப்போக்கில் மாநில அரசுகள் நடத்த துவங்கின. மதுகடைகளை முற்றிலுமாக எதிர்ப்பதாக கூறி வரும் பா.ஜ.க, அதன் கட்சி ஆளும் மாநிலங்கள்தான் அதிக மதுபான வியாபாரத்தை செய்து வருகிறது.

நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ள உத்தரப் பிரதேச அரசுதான், அதிக மதுபானத்தையும் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. கள்ளச்சாராயமும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் கொடி கட்டி பறக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோகிறது. அவர்களின் குடும்பங்கள் நடுதெருவில் நிற்கின்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மது வருமானம் ₹.1 லட்சம் கோடி: வாய் இருக்குனு இஸ்டத்துக்கு.. அண்ணாமலை கவனத்திற்கு!

இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இருப்பதே மதுபானங்கள் மீது வசூலிக்கப்படும் கலால் வரியும், மதுபானக் கடை நடத்துவதற்கு செலுத்தப்படும் உரிமக் கட்டணமும்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் மதுபானம் அதிகளவில் விற்கப்படுவது போலவும், இதற்கென்று ஒரு அமைச்சரை நியமித்து இருப்பது போலவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 3 நாட்களில் தமிழகத்தில் ரூ.700 கோடிக்கும் மேல் மது விற்பனை நடந்ததாக ஊடகங்கள், பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது குறித்து விமர்சித்த அவர் , தமிழகத்தின் மதுவிலக்கு துறை அமைச்சரை ‘சாராய வியாபாரி’ என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலடி தந்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, ‘புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு 50 புது ரக மதுபானங்களை அறிமுகப்படுத்திய ஆளுநர் தமிழிசையை அண்ணாமலை சொல்வது போல் கூறலாமா?’ என்று கேட்டார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மது வருமானம் ₹.1 லட்சம் கோடி: வாய் இருக்குனு இஸ்டத்துக்கு.. அண்ணாமலை கவனத்திற்கு!

நாட்டில் அதிக மதுக்கடைகளை வைத்திருப்பதும், அதன் மூலம் அதிக வருமானம் பார்ப்பதும் உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசுதான். யோகி முதல்வரான பின், புதிதாக 2,706 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு அங்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த நிதியாண்டில் மது விற்பனை மூலம் ரூ.27,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதேபோல், பா.ஜ.க ஆளும் 17 மாநிலங்களில் (மதுவிலக்கு உள்ள ஒரு சில மாநிலங்களை தவிர) மதுவிற்பனை படுஜோராக நடக்கிறது.

கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் கடந்த நிதியாண்டில் ரூ.17,177.19 கோடி, புதுச்சேரியில் ரூ.1,063 கோடி, அரியானாவில் ரூ.7,938 கோடி, உத்தரகாண்டில் ரூ.247.6 கோடி, அசாமில் ரூ.2,031.33 கோடி, அருணாச்சல் பிரதேசத்தில் ரூ.163.42 கோடி, கோவாவில் ரூ.500 கோடி, மேகாலயாவில் ரூ.300 கோடி, மத்திய பிரதேசத்தில் ரூ.10,500 கோடி என பா.ஜ.க அரசுகள் ஆளும் மாநிலங்களில் மட்டும், மது விற்பனை மூலம் ரூ.1 லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மது வருமானம் ₹.1 லட்சம் கோடி: வாய் இருக்குனு இஸ்டத்துக்கு.. அண்ணாமலை கவனத்திற்கு!

அப்படியானால், ‘மது விற்கும் அனைத்து பா.ஜ.க அரசுகளும், ‘சாராய அரசு’ என்று கூற முடியுமா? இதை அண்ணாமலை ஏற்று கொள்வாரா? நாடு முழுவதும் விற்கப்படும் அனைத்து வகையான மதுவுக்கும் ஒன்றிய அரசு வரி வாங்குகிறது. ஒட்டு மொத்தத்துக்கு தலைமை வகிக்கும் ஒன்றிய அரசுக்கு அவர் என்ன பட்டம் சூட்டுவார்?’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மது விற்பனை அமோகமாக நடக்கிறது என்றால், மதுவிலக்கு அமலில் உள்ள பா.ஜ.க ஆளும் குஜராத், மற்றும் மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடக்கிறது. நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே கள்ளச்சாராயம் குடித்து 6 ஆயிரம் பலியாகி உள்ளனர். இதில், அதிக பலி பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பதிவாகி இருக்கிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மது வருமானம் ₹.1 லட்சம் கோடி: வாய் இருக்குனு இஸ்டத்துக்கு.. அண்ணாமலை கவனத்திற்கு!

டெல்லியில் மேலும் 700 கடைகள் திறப்பு

டெல்லியில் கடந்த 2021 நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை அம்மாநில துணை முதல்வரும், மதுபானத்துறை அமைச்சர் மணிஷ் சிசோடியாவும் அறிவித்தார்கள். அப்போது, டெல்லியில் மொத்தம் 868 மதுக்கடைகள் செயல்பட்டது. இந்த மது கொள்கை மூலம் மெகா முறைகேடு நடந்துள்ளதாக கூறி, சிசோடியா உட்பட 15 பேர் மீது ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து, சிசோடியாவிடம் 8 மணி நேரம் விசாரித்தது. இந்த வழக்கில் பிரபல தொழிலதிபர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் புதிய மதுபான கொள்கையை வாபஸ் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்தது. தற்போது, டெல்லியில் 500 அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த டிசம்பருக்குள் கூடுதலாக 700 மதுக்கடைகளை திறக்க அது திட்டமிட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மது வருமானம் ₹.1 லட்சம் கோடி: வாய் இருக்குனு இஸ்டத்துக்கு.. அண்ணாமலை கவனத்திற்கு!

தலைநகரில் போதை பெண்கள் 37% அதிகரிப்பு!

டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வரும் நிலையில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில், நாட்டில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பின்பு ஊரடங்கு அமலான சூழலில், டெல்லி பெண்களிடையே மதுபான நுகர்வு அதிகரித்து உள்ளது என தெரிய வந்துள்ளது. இது பற்றி 5 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அதில், கடந்த 3 ஆண்டுகளில் மதுபானம் குடிப்பது தங்களிடம் அதிகரித்து உள்ளது என 37.6 சதவீத பெண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மன அழுத்தத்தினால் பெண்களிடையே மது அருந்துவது 45 சதவீதம் அதிகரித்து உள்ளது. கொரோனாவுக்கு பின்னர், ஆண்களை விட பெண்களிடையே அதிகளவில் குடிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மது வருமானம் ₹.1 லட்சம் கோடி: வாய் இருக்குனு இஸ்டத்துக்கு.. அண்ணாமலை கவனத்திற்கு!

கள்ளச்சாராயம் குடித்து 5 ஆண்டில் 6,000 பேர் பலி!

நாட்டில் உள்ள பல கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து வருகிறது. கிராமங்களில் ஊறல் போட்டு கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. இதற்கு அங்குள்ள போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, 2021ம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 782 பேர் பலியாகி உள்ளனர். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 137 பேர் பலியாகி உள்ளனர்.

பஞ்சாப் 127, மத்திய பிரதேசம் 108, கர்நாடகா 104 பேர் பலியாகி உள்ளனர். நாட்டில் 2016-2020 வரை கள்ளச்சாராயம் குடித்து 6,000 பேர் பலியாகி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 2018ம் ஆண்டு மட்டும் 1,200 பேர் பலியாகி உள்ளனர். சட்டீஸ்கரில் 5 ஆண்டில் 505 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 909 பேரும், பஞ்சாப்பில் 725 பேரும் பலியாகி உள்ளனர். நாட்டில் குறைந்தபட்சமாக 2020ம் ஆண்டில் (ஊரடங்கின்போது) மட்டும் 947 பேர் பலியாகி உள்ளனர்.

நன்றி - தினகரன் நாளிதழ்

banner

Related Stories

Related Stories