தமிழ்நாடு

"தி.மு.க-வின் வரலாறு தெரியாமல் உளறி வருகிறார் அண்ணாமலை".. ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

சுதந்திர இந்தியாவில் மொழிக்காக அதிகளவில் சிறை சென்ற இயக்கம் தி.மு.கதான் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

"தி.மு.க-வின் வரலாறு தெரியாமல் உளறி வருகிறார் அண்ணாமலை"..  ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க, ஓமலூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் ஆதிக்க இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொது கூட்டம், நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குச் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துபவர்கள், இந்தி தெரிந்த வட இந்தியவர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் வேலை பார்ப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

"தி.மு.க-வின் வரலாறு தெரியாமல் உளறி வருகிறார் அண்ணாமலை"..  ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழிகள் சற்று அழிந்து வரும் நிலையில், அறிஞர் அண்ணா வகுத்த இருமொழி கொள்கை தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயல்கிறது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகுத் தாய் மொழிக்காக அதிக அளவில் சிறைக்குச் சென்றவர்கள் தி.மு.க-வினர்தான். மொழிக்காகச் சிறை சென்ற தி.மு.க-வினரை பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி, 1960 ஆம் ஆண்டு ஆங்கில மொழியை ஆட்சி மொழியாகப் பெற்றுக் கொடுத்த கட்சி தி.மு.க.

"தி.மு.க-வின் வரலாறு தெரியாமல் உளறி வருகிறார் அண்ணாமலை"..  ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் பேசி வருகிறார். அவருக்குத் தமிழ்நாட்டு வரலாறும் தெரியவில்லை, தி.மு.கவின் வரலாறும் தெரியவில்லை. இந்தியைத் திணிக்க முயன்றால் ஒரு நாளும் தமிழகம் அதை அனுமதிக்காது. தமிழ்நாட்டைக் காப்பாற்றும் தலைவராக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories