தமிழ்நாடு

"இறைவன் பெயரால் 'இரத்தம்' குடிப்பது..": இணையத்தில் வைரலாகி வரும் கோவை காவல்துறை ஆணையரின் கவிதை!

கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 'மதம் vs மதம்' என்ற தலைப்பில் எழுதிய கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

"இறைவன் பெயரால் 'இரத்தம்' குடிப்பது..":  இணையத்தில் வைரலாகி வரும் கோவை காவல்துறை ஆணையரின் கவிதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவையில் கடந்த 23ஆம் தேதி அதிகாலையில் கார் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த முபின் ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பில் தொடர்பிலிருந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் ஆறு பேரை கைது செய்தனர்.

அதேபோல், 2019ம் ஆண்டே தேசிய புலனாய்வு முபினிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கைத் தமிழ்நாடு போலிஸார் என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளது.

"இறைவன் பெயரால் 'இரத்தம்' குடிப்பது..":  இணையத்தில் வைரலாகி வரும் கோவை காவல்துறை ஆணையரின் கவிதை!

மேலும் தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் 'மதம் vs மதம்' என்ற தலைப்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் எழுதி கவிதை ஒன்று தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் "மதம் மனிதனுக்குள் இருக்கும் வரை மனிதம் தழைக்கிறது; அதே.. " என தொடங்கும் கவிதை நீண்டு சென்று 'கடைசியில் மிஞ்சப் போவது யாருமில்லை" என முடிகிறது. இந்த கவிதை முழுக்க முழுக்க மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை மையமாக வைத்தே இந்த கவிதை நகர்கிறது.

"இறைவன் பெயரால் 'இரத்தம்' குடிப்பது..":  இணையத்தில் வைரலாகி வரும் கோவை காவல்துறை ஆணையரின் கவிதை!

இந்த கவிதையைப் படித்த பலரும் ஆணையர் பாலகிருஷ்ணனை பாராட்டி வருகின்றனர். மேலும் இவர் கவிதை கூட எழுதுவாரா என ஆச்சரியத்துடன் கவிதையைப் படித்து வருகின்றனர். கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர். இவர் இளைஞர்களிடம் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வீதி தோறும் நூலகம், ஆட்டோ நூலகம் போன்று பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories