தமிழ்நாடு

100 வயதைக் கடந்த முதலமைச்சரின் தாய் மாமா : நெகிழ்ச்சியாய் வாழ்த்திப் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

“திருவாரூர் மாவட்டத்தில் எப்போது நான் சுற்றுப்பயணம் சென்றாலும், என் மீது மிகுந்த பாசமும், பற்றும் கொண்ட அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

100 வயதைக் கடந்த முதலமைச்சரின் தாய் மாமா : நெகிழ்ச்சியாய் வாழ்த்திப் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“நூறாண்டுகளை கண்டுள்ள அவரது நினைவாற்றல் இன்றும் என்னை வியக்க வைக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மாமா தட்சிணாமூர்த்திக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “எனது தாய் மாமாவும் கழகப் பற்றாளருமான திரு. தட்சிணாமூர்த்தி அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு 100-ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

திருவாரூர் மாவட்டத்தில் எப்போது நான் சுற்றுப்பயணம் சென்றாலும், என் மீது மிகுந்த பாசமும், பற்றும் கொண்ட அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பேன். அவரும் நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்து என்னை நலம் விசாரிப்பார்.

100 வயதைக் கடந்த முதலமைச்சரின் தாய் மாமா : நெகிழ்ச்சியாய் வாழ்த்திப் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

தனது வாழ்நாளில் நூறாண்டுகளைக் கண்டுள்ள அவரது நினைவாற்றல் இன்றும் என்னை வியக்க வைக்கிறது. அந்த அளவிற்கு நடப்பு விவரங்களை விரல் நுனியில் வைத்து என்னைச் சந்திக்கும் நேரங்களில் பேசுவார்.

அவரது நூறாவது பிறந்தநாளான இன்று, அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் நல்ல உடல்நலனுடன் எங்களோடு மேலும் பல்லாண்டு பயணித்திட இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories