தமிழ்நாடு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : 31 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பெரும் விடுதலை !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டதையடுத்து மீதமுள்ள 6 பெரும் தற்போது விடுதலையானர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு :  31 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பெரும் விடுதலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டதையடுத்து மீதமுள்ள 6 பெரும் தற்போது விடுதலையானர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் என மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் பல முறை முயன்றது. இருப்பினும் அது பெரிதாக கைகொடுக்கவில்லை. பின்னர் கடந்த 5 ஆண்டுகால எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இவர்களை கண்டுகொள்ளவே இல்லை. இருப்பினும் எதிர்க்கட்சியாக இருந்த அப்போதைய திமுக இதற்கு குரல் எழுப்பி வந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு :  31 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பெரும் விடுதலை !

பின்னர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவர் என்று முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பே வாக்குறுதி அளித்தார். அதன்படி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகும் விடாமல் முயற்சி செய்த தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வந்தது.

மேலும் கடந்த 2018-ம் ஆண்டு ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு :  31 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பெரும் விடுதலை !

திமுக அரசு தொடர்ந்து எடுத்து வந்த முயற்சியில் முதலில் பேரறிவாளனுக்கு தி.மு.க அரசு பரோல் கொடுத்து வந்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றமும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் தி.மு.க அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுலை குறித்து சட்டப்போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வந்தது.

இந்நிலையில் பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் விடுதலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எஞ்சியிருக்கும் 6 பேருக்குமே பொருந்தும் என்பதால், நளினி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு :  31 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பெரும் விடுதலை !

இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்த நிலையில், நேற்று பகல் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை தவிர மீதம் இருக்கக்கூடிய 6 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றதையடுத்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினி விடுதலை செய்யப்பட்டார்.

சுமார் 31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட நளினியை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன்; புழல் சிரியாவில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு :  31 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பெரும் விடுதலை !

முன்னதாக தனக்கு தாயாரை பார்த்துக்கொள்ள வேண்டுமென்று பரோல் கேட்டு மனு அளித்திருந்தார். அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நளினிக்கு பரோல் தமிழ்நாடு அரசு வழங்கியது. தற்போது 10 மாத காலமாக காட்பாடியில் தனது தாயாருடன் வசித்து வரும் இவர், தற்போது விடுதலை செய்யப்பட்டதையடுத்து தனக்கு விடுதலை கிடைத்ததால் தனது பரோலை ரத்து செய்துகொள்வதாக கைப்பட கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து விடுதலையானார்.

banner

Related Stories

Related Stories