தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து இறந்த தம்பதி.. கேட்டை பூட்ட சென்றபோது நேர்ந்த சோகம் !

கேட்டை பூட்ட சென்ற வயதான தம்பதியினர் கேட்டை பூட்ட சென்றபோது மின்கசிவு ஏற்பட்டு அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து இறந்த தம்பதி.. கேட்டை பூட்ட சென்றபோது நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேட்டை பூட்ட சென்ற வயதான தம்பதியினர் கேட்டை பூட்ட சென்றபோது மின்கசிவு ஏற்பட்டு அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பருவமழைக் காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதேவேளையில் வீட்டில் தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களை தவிர்க்கும் படியும், மழைக் காலத்திற்கு முன்பே மின் பழுது ஏதாவது இருந்தால் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளின் ஒப்புதலுடன் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து இறந்த தம்பதி.. கேட்டை பூட்ட சென்றபோது நேர்ந்த சோகம் !

அதேபோல் ஈரமான கையால் எளிதில் மின் சாரம் பாயும் பொருட்களைக் கொண்டு வீட்டில் உள்ள ஸ்விட்ச்களை பயன்படுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் சிலர் வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் அங்காங்கே மின் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அவல நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது.

அப்படி சென்னையில் குடியிருப்பின் கேட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கிற்கு செல்லும் மின்சார ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு தம்பதியினர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தில் பிரவுன் ஸ்டோன் பவுண்டேஷன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 6 வீடுகள் உள்ளன. இதில் தரைதளத்தில் இருக்கும் வீட்டில் மூர்த்தி (78) மற்றும் அவரது மனைவி பானுமதி (76) ஆகியோர் வசித்து வந்தனர்.

மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து இறந்த தம்பதி.. கேட்டை பூட்ட சென்றபோது நேர்ந்த சோகம் !

மூர்த்தி வருமான வரித்துறையில் அதிகாரியாகவும், அவரது மனைவி தடய அறிவியல் துறையில் துணை கண்காணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புற கேட்டை பூட்டுவதற்காக முதியவர் மூர்த்தி சென்றுள்ளார். அப்போது அந்த கேட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கிற்கு செல்லும் மின்சார ஒயரில் மின்கசிவு ஏற்பட்டிருந்துள்ளது. இதையறியாத முதியவர் அந்த கேட்டை தொட்டுள்ளார்.

மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து இறந்த தம்பதி.. கேட்டை பூட்ட சென்றபோது நேர்ந்த சோகம் !

அப்போது மின்சாரம் தாக்கி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கேட்டை பூட்ட சென்ற தனது கணவர் இன்னும் வரவில்லை என்று அவரை தேடி சென்ற மூதாட்டி பானுமதி, தனது கணவர் கேட்டில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியுற்றார். அதனை கண்டு பதறிப்போன மூதாட்டி தனது கணவரை தூக்க சென்றுள்ளார்.

அப்போது அவரும் அந்த கேட்டை தொட்டதால் அவர் மீதும் மின்சாரம் சட்டென்று தாக்கியுள்ளார். இதில் பானுமதியும் உயிரிழந்தார். கேட்டை பூட்ட சென்ற வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தம்பதியினர் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து இறந்த தம்பதி.. கேட்டை பூட்ட சென்றபோது நேர்ந்த சோகம் !

முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் பல நாட்களாக பயன்படுத்தாத குளிசாதன பேட்யில் (Fridge) மின்கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories