தமிழ்நாடு

“தன்னும் ஒரு பா.ஜ.க தலைவர் என நினைத்து செயல்பட்டுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : முத்தரசன் கடும் விமர்சனம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநருக்கான பொறுப்பிலிருந்து விடுப்பட்டு மாநில பாஜக தலைவர் போல செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

“தன்னும் ஒரு பா.ஜ.க தலைவர் என நினைத்து செயல்பட்டுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : முத்தரசன் கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநருக்கான பொறுப்பிலிருந்து விடுப்பட்டு மாநில பா.ஜ.க தலைவர் போல செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த அதிகத்தூரில் அமைந்துள்ள பன்னாட்டு கார் உதிரிபாகம் தொழிற்சாலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிலம் கொடுத்த நபர்களுக்கு வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

“தன்னும் ஒரு பா.ஜ.க தலைவர் என நினைத்து செயல்பட்டுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : முத்தரசன் கடும் விமர்சனம்!

பேச்சுவார்த்தையில் பங்கேற்றபின் செய்தியாளர் சந்தித்த முத்தரசன், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஆளுநர் தொடர்ந்து தெரிவித்து வருவகிறார். ஆளுநரை திரும்பபெறக் கோரி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வலியுறுத்தும் வகையில் தி.மு.க கூட்டணி கட்சி எம்.பிகள் கையொப்பம் பெறுவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த இரண்டு எம்.பிகள் கையொப்பம் போட்டுள்ளனர்.

சென்னையில் மழை நீர் தேங்காத வகையில் அரசு நல்ல முயற்சியில் மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது என பிரதமர் மோடியின் கருத்துக்கு பதில் அளித்த அவர் மோடி வாயிலிருந்து உண்மைகள் வெளியே வருவது மிக குறைவு என்றும் அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories