தமிழ்நாடு

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. விரைவில் திருமணம் !

கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் பணியாற்றிய இருவருக்குள் காதல் மலர்ந்ததில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. விரைவில் திருமணம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னையை சேர்ந்தவர் மகேந்திரன். பட்டதாரியான இவர் அதிகப்படியான கோபம், மனஅழுத்தம் காரணமாக கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் இரண்டு வருடம் ட்ரீட்மென்ட் எடுத்துள்ளார். இவருக்கு சொந்தம் என சொல்லி கொள்ள பெரிதாக யாரும் இல்லாததால் ட்ரீட்மென்ட் எடுத்த கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் டேகேரில் ஹவுஸ்கீப்பிங் சூப்பர்வைசராக வேலை செய்துவருகிறார்.

இவர் அங்கு வேலை செய்துகொண்டிருந்த போது அந்த அரசு மனநலக் காப்பகத்துக்கு தீபா என்ற ஆசிரியரும் ட்ரீட்மென்ட்கு வந்துள்ளார். பின்னர் அவரும் ட்ரீட்மென்ட் முடிந்ததும் கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் cafe r'vive-ல் வேலை செய்து வருகிறார்.

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. விரைவில் திருமணம் !

இந்த நிலையில், தற்போது 42 வயதான மகேந்திரனுக்கும் 36 வயதான தீபாவுக்கும் காதல் மலர்ந்துள்ளார். இதனை இருவரும் அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ண சந்திரிகாவிடம் கூறியுள்ளனர். உடனே இவர்களின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த அவர் இருவரின் குடும்பத்தாரிடமும் இது குறித்து பேசி சம்மதம் வாங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த காதல் பறவைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெறவுள்ளது. இது குறித்து பேசிய இயக்குனர் பூர்ண சந்திரிகா எங்கள் காப்பகத்தில் எல்லாரும் தீபாவளியை விட இந்த கல்யாணத்துக்குதான் ரொம்பவே ஆர்வமா இருக்காங்க என்று மகிழ்ச்சி போங்க கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories