தமிழ்நாடு

'இந்தி தெரியாது போடா': ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் MLA!

இந்தித் திணிப்பை மீண்டும் முயன்றால் டெல்லி வந்து போராடுவோம் என உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'இந்தி தெரியாது போடா':  ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் MLA!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தித் திணிப்பு மற்றும், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் ஒன்றிய அரசின் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், " ஒன்றியம் என்று சொன்னால்தான் கோவம் வரும். அதனால் ஒன்றிய அரசு என்றுதான் சொல்வோம்.

தமிழ்நாட்டில் நடப்பது அப்போது இருந்த அ.தி.மு.க ஆட்சி அல்ல. அப்போது இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அல்ல. இது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி. இந்தித் திணிப்பை எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி ஆட்சியில் அமர்ந்த இயக்கம்தான் தி.மு.க. எந்த வகையில் இந்தி மொழியைத் திணித்தாலும் எங்களது பதில் 'இந்தி தெரியாது போடா' என்பதுதான்.

'இந்தி தெரியாது போடா':  ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் MLA!

தி.மு.க எந்த போராட்டத்தை முன்னெடுத்தாலும் வெற்றிதான். இது முதல்கட்ட போராட்டம் தான். மீண்டும் இந்தி திணிக்க முயன்றால் டெல்லி வந்து போராடுவோம். 2 நாட்களுக்கு முன் மேற்குவங்கத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்பு போராட்டத்தில் அண்ணா, கலைஞரின் புகைப்படம் ஏந்தி போராட்டம் நடத்தினர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ஜ.க வை ஓட ஓட விரட்டியதுபோல் 2024 தேர்தலிலும் மீண்டும் தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.கவை அடித்து விரட்டுவார்கள்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories