தமிழ்நாடு

தகராறில் திருடப்பட்ட பாஜக தலைவரின் வைர மோதிரம் -அதிரடி திருப்பமாக பாஜக செயலாளர் கைது.. கோவையில் பரபரப்பு!

நட்சத்திர ஹோட்டல் முன்பு நடந்த சண்டையில் பாஜகவை சேர்ந்த ஒருவரது வைர மோதிரம் திருடப்பட்ட சம்பவத்தில் பாஜக இளைஞர் அணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகராறில் திருடப்பட்ட பாஜக தலைவரின் வைர மோதிரம் -அதிரடி திருப்பமாக பாஜக செயலாளர் கைது.. கோவையில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோவை மாவட்டம் சரவணம்பட்டி ரெவீன்யூ நகரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் கோவை மாவட்ட பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தலைவராக உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் இவர், தனது மகனான டேவிட் என்பவரது பிறந்தநாள் விழாவை கோவை ரேஸ்கோர்சில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்.

அதற்காக அங்கு வந்த ஜான்சன் மற்றும் அவரது மகன், அங்கு நடந்த ஜோடிகள் நடன நிகழ்ச்சியை பார்க்க ரூ.2,500 பணம் செலுத்தியுள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர் ஒருவர், இந்த நிகழ்ச்சியை காண ஜோடியுடன் தான் செல்ல வேண்டும் என்று கூறி அனுமதி மறுத்தார்.

தகராறில் திருடப்பட்ட பாஜக தலைவரின் வைர மோதிரம் -அதிரடி திருப்பமாக பாஜக செயலாளர் கைது.. கோவையில் பரபரப்பு!

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறுது நேரத்திலேயே இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் ஜான்சன் மற்றும் அவரது மகனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் ஜான்சன் மகன் டேவிட் பல் உடைந்தது. அவர் அணிந்திருந்த வைர மோதிரம் களவு போனது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம் எனத் தெரிகிறது. டேவிட் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலில் மகனின் பல் உடைந்துள்ளது. மேலும் அவர் அணிந்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரமும் திருடு போனது. பின்னர் படுகாயமடைந்த இருவரும் மருத்துமனையில் சிகிச்சை பெற்றனர்.

தகராறில் திருடப்பட்ட பாஜக தலைவரின் வைர மோதிரம் -அதிரடி திருப்பமாக பாஜக செயலாளர் கைது.. கோவையில் பரபரப்பு!

அதோடு பா.ஜ.க சிறுபான்மை பிரிவுத் தலைவர் ஜான்சன் ஒட்டலில் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது. இதையடுத்து இது குறித்து ஜான்சன் மற்றும் அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அந்த ஹோட்டலின் கணக்காளர் விஷ்ணு பாரதி, ஹோட்டேல் பவுன்சர்கள் ரெயின்போ ரமேஷ், பில்லா ரமேஷ், ரஞ்சித், சுதர்சன், முகமது அப்ரிதீன் உள்ளிட்டோர் மீது தாக்குதல், கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தகராறில் திருடப்பட்ட பாஜக தலைவரின் வைர மோதிரம் -அதிரடி திருப்பமாக பாஜக செயலாளர் கைது.. கோவையில் பரபரப்பு!

பின்னர் அவர்களில் தலைமறைவாக இருந்த ரெயின்போ ரமேஷ் தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் பா.ஜ.க இளைஞரணி செயலராக இருப்பதும், தற்போது பகுதி நேரமாக அந்த ஹோட்டலில் பவுன்சராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories