தமிழ்நாடு

‘தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?.. உங்க ஊருக்கு எங்க இருந்து போகணும் தெரியுமா?’ : சிறப்பு பேருந்து அட்டவணை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் பேருந்து நிலையப் பட்டியலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

‘தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?.. உங்க ஊருக்கு எங்க இருந்து போகணும் தெரியுமா?’ : சிறப்பு பேருந்து அட்டவணை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதற்காக தமிழக அரசு சார்பில் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் சென்னை பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் அட்டவணையை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

‘தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?.. உங்க ஊருக்கு எங்க இருந்து போகணும் தெரியுமா?’ : சிறப்பு பேருந்து அட்டவணை

அது பின்வருமாறு :

>> மாதவரம் புதிய பேருந்து நிலையம் :

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்

>> கே.கே.நகர் மா.போ.கழக பேருந்து நிலையம் :

ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள், கே.கே.நகர் மா.போ.கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

‘தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?.. உங்க ஊருக்கு எங்க இருந்து போகணும் தெரியுமா?’ : சிறப்பு பேருந்து அட்டவணை

>> தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ) :

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

>> தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம் :

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

‘தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?.. உங்க ஊருக்கு எங்க இருந்து போகணும் தெரியுமா?’ : சிறப்பு பேருந்து அட்டவணை

>> பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம் :

வேலூர், ஆரணி ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம் செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

>> எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு :

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்..

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம் கோயம்புத்தூர், மற்றும் பெங்களூரு.

banner

Related Stories

Related Stories