தமிழ்நாடு

ரயிலில் தவறவிட்ட மாணவியின் லேப்டாப்.. 4 மணி நேரத்திலேயே மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலிஸ்!

ரயிலில் மாணவி தவற விட்ட லேப்டாப்பை 4 மணி நேரத்தில் போலிஸார் மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

ரயிலில் தவறவிட்ட மாணவியின் லேப்டாப்.. 4 மணி நேரத்திலேயே மீட்டு ஒப்படைத்த ரயில்வே  போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவியான மதுஸ்மிதா நேற்று முன்தினம் ரயிலில் பெங்களூருவில் இருந்து காட்பாடிக்குப் பயணம் செய்துள்ளார். பின்னர் மதுஸ்மிமா காட்பாடி வந்தவுடன் ரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்தபோதுதான் தனது லேப்டாப்பை ரயிலிலேயே வைத்து விட்டு இறங்கியது அவருக்குத் தெரிந்தது. ஆனால் அதற்குள் ரயில் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டது.

மேலும் மாணவி தவறவிட்ட லேப்டாப் பையில், ரூ. 1.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களும் இருந்துள்ளன. இதுமட்டுமின்றி லேப்டாப்பில் மாணவி ஆய்வு சம்பந்தப்பட்ட கோப்புகளும் இருந்துள்ளது.

இதனால், மாணவி ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருந்தார் மாணவி மதுஸ்மிதா. துரிதமாகச் செயல்பட்ட ரயில்வே போலிஸார், மாணவி பயணம் செய்த ரயிலில் சென்று கொண்டு இருந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே காவல்துறையினரை தொடர்பு கொண்டு 1 மணி நேரத்திலேயே ரயிலில் மாணவியின் லேப்டாப்பை கண்டுபிடித்தனர்.

ரயிலில் தவறவிட்ட மாணவியின் லேப்டாப்.. 4 மணி நேரத்திலேயே மீட்டு ஒப்படைத்த ரயில்வே  போலிஸ்!

அது மட்டுமின்றி, ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து மாற்று ரயில் மூலமாக அந்த லேப்டாப் பையை மீண்டும் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வரவழைத்து மாணவியிடம் 4 மணி நேரத்திற்குள் பத்திரமாக ரயில்வே ஒப்படைத்தனர். இதையடுத்து மாணவி மதுஸ்மிமா லேப்டாப்பை பத்திரமாக மீட்டுத் தந்த ரயில்வே போலிஸாரை பாராட்டி தனது சமூகவலைதத்தில் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories