தமிழ்நாடு

திடீரென்று தாக்கிய மின்னல்.. தூங்கிக்கொண்டிருந்தவருக்கு நேர்ந்த சோகம் ! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி !

தூங்கிக்கொண்டிருந்தவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென்று தாக்கிய மின்னல்.. தூங்கிக்கொண்டிருந்தவருக்கு நேர்ந்த சோகம் ! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முழுவதும் தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒரு பகுதியில் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிவப்பா என்ற நபர் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

திடீரென்று தாக்கிய மின்னல்.. தூங்கிக்கொண்டிருந்தவருக்கு நேர்ந்த சோகம் ! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி !

முன்னதாக இதே போன்று நேற்றைய முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வசிஷ்டபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த துளசி நாதன் என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்த போது திடீரென்று மழை பெய்துள்ளது.

அப்போது இடி மின்னல் தாக்கியதில் துளசி நாதனும், அவரது ஒரு மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories