தமிழ்நாடு

"பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழுந்தது".. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

கலைஞரின் கருப்பு சிவப்புப் படையை வழிநடத்தும் பொறுப்பை நான் ஏற்றேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழுந்தது".. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடைபெற்று வரும் தி.மு.க பொதுக்குழுவில் 2வது முறையாக ஒருமனதாக மீண்டும் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து சிறப்புரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்," அண்ணனுக்கு அண்ணனாக இருந்து கழகத்தைக் காத்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்களும் நம்மிடம் விடைபெற்றுச் சென்றபோது இந்த எளியேன் தலையில் தலைமைப் பொறுப்பு சுமத்தப்பட்டது. ஐம்பது ஆண்டுகாலம் கழகத்தை எத்தகைய சூழலிலும் வளர்த்துக் காத்த கலைஞரின் கருப்பு சிவப்புப் படையை வழிநடத்தும் பொறுப்பை நான் ஏற்றேன். நான் ஏற்றேன் என்றால் என்னை நம்பி மட்டுமல்ல- உங்களை நம்பித்தான் ஏற்றேன். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தைரியத்தில்தான் பொறுப்பை ஏற்றேன்.

"பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழுந்தது".. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

அன்று முதல் நமக்கு ஏறுமுகம்தான்!

* கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்றோம்.

* நாடாளுமன்றத் தேர்தலில் வென்றோம்.

* சட்டமன்றத் தேர்தலில் வென்றோம்.

* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்றோம். - வெற்றிச் செய்தியைத் தவிர நமது காதுகள் வேறு ஏதும் கேட்கவில்லை. அந்தளவுக்கு வெற்றிக் கோட்டையாகக் கட்டி வைத்துள்ளோம் கழகத்தை!

கழகத்தின் 15-ஆவது பொதுத்தேர்தல் இது. பேரூர் கழகம் - ஒன்றியக் கழகம் - நகரக் கழகம் - பகுதிக் கழகம் - மாநகரக் கழகம் - மாவட்டக் கழகம் - ஆகிய ஆறு படி நிலைகளில் கழகத்தில் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் செயலாளர்கள்- தலைமைச் செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்கள்- மாநகரக் கழக நிர்வாகிகள்- மாவட்டக் கழக நிர்வாகிகள் என 1 இலட்சம் பேர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள்.

"பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழுந்தது".. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

அமைதியாக தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. தலைமைக் கழகத்தின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு- தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதல் படி- கிளைக் கழகம் முதல் பகுதிக் கழகம் வரையிலான தேர்தல்களை அமைதியாக நடத்திய தலைமைக் கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவர்க்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில இடங்களில் வாக்குவாதங்கள்- மனவருத்தங்கள் இருந்தாலும்- அதனை அமைதியாகச் சமாளித்து தேர்தலை நடத்தி முடித்து தலைமைக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள்.

பார்த்தீர்களா... தி.மு.க.வின் வன்முறைக் கலாச்சாரத்தை!" என்று எழுதலாம் என்று துடித்த சில பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழ - நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்களின் பதவிப் போட்டிகள் சுமுகமாக முடிந்தன. உடனே, 'தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை' என்று எழுதத் தொடங்கி விட்டார்கள். என்னை விட - உங்களை விட - இந்த நாட்டில் சில பத்திரிக்கைகள் அதிகப்படியான தி.மு.க. பாசம் கொண்டு செயல்படுவதைப் பார்த்து இதைப் படிப்பவர்கள்தான் பாவம், தலைசுற்றிக் கீழே விழுவார்கள் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories