தமிழ்நாடு

"அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும்".. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

நாற்பது தொகுதிகளையும் கைப்பற்றுவதன் மூலமாக அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும் என பொதுக்குழுவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும்".. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடைபெற்று வரும் தி.மு.க பொதுக்குழுவில் 2வது முறையாக ஒருமனதாக மீண்டும் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து சிறப்புரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,"நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளையும் கைப்பற்றுவதன் மூலமாக அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல்தானே என்று மெத்தனமாக இருந்து விடக் கூடாது. அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றியை நாம் பெற இதுதான் அடித்தளமாக அமையும் என்பதை மறந்து விட வேண்டாம்.

எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை இப்போதே தொடங்குங்கள். இதற்கான நடைமுறைகள், வழிமுறைகள் தலைமைக் கழகத்தின் சார்பில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பூத் கமிட்டிக்குள் அனைத்து தரப்பினரும் இடம் பெறும் வகையில் - அனைவரையும் அரவணைத்து - நியமனம் செய்யுங்கள்.

"அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும்".. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

கட்சித் தேர்தல் முடிந்துவிட்டது. நீங்கள் வென்று விட்டீர்கள். அதன்பிறகும் மற்றவர்களோடு போட்டியோ பொறாமையோ வேண்டாம். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். உதயசூரியனின் வெளிச்சத்தால் ஒளி பெற்றவர்கள். பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள். கலைஞரின் உடன்பிறப்புகள் என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒன்று இல்லாவிட்டால் - தமிழ்நாட்டின் நிலைமை இப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. தமிழர்களை தமிழர்கள் என உணர வைத்த இயக்கம். அப்படி உணர்ந்த தமிழர்களை உரிமைக்காக போராட வைத்த இயக்கம். போராடிய தமிழர்களை ஆட்சி அதிகாரத்துக்கு வர வைத்த இயக்கம்.

"அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும்".. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

தேய்ந்த தெற்கை தலைநிமிர வைத்த இயக்கம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு இல்லத்திலும் பட்டதாரிகளை உருவாக்கிய அறிவியக்கம். இன்று உலகம் முழுக்க வேலைகளுக்காக, தொழில்களுக்காக செல்லக் காரணமான கட்டுமானத்தை உருவாக்கிய இயக்கம். ஒரு மாநிலம் தானே என்று இல்லாமல் - ஒரு நாட்டுக்கான அனைத்துத் தன்னிறைவும் பெற்றதாக தமிழ்நாட்டை உயர்த்திய இயக்கம். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிய இயக்கம். பெண்ணினத்தை பேராளுமை உள்ளவர்களாக ஆக்கிய இயக்கம்.

அத்தகைய இயக்கத்துக்கு நான் தலைவராகவும் - நீங்கள் ஒவ்வொரு பொறுப்புக்கும் வந்திருக்கிறோம். இதனை விட வாழ்வில் பெருமை என்ன இருக்க முடியும். இந்தப் பெருமையையும் புகழையும நமக்குத் தந்த கழகத்துக்காக எந்நாளும் உழைப்போம். கழகமும் தமிழகமும் நம் இரு கண்கள். கண்ணின் மணிகளே என்று தொடங்கினார் அண்ணா. அண்ணா வழியில் அயராது உழைப்போம்! கலைஞரின் கட்டளைகளைக் கண்போல் காப்போம்! என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories