தமிழ்நாடு

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 .. ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து, 2000 வங்கி கணக்குகளை முடக்கிய போலிஸ்!

ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 2000 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை போலிஸார் முடக்கியுள்ளனர்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 .. ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து, 2000 வங்கி கணக்குகளை முடக்கிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முழுவதும் குற்றங்களைத் தடுக்க டி.ஜி.பி சைலேந்திரபாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டையைத் தடுக்க கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை போலிஸார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 .. ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து, 2000 வங்கி கணக்குகளை முடக்கிய போலிஸ்!

இதையடுத்து கஞ்சா விற்பனையை முற்றாகத் தடுக்கும் வகையில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 அதிரடி திட்டத்தை டி.ஜி.பி சைலேந்திர பாபு கையில் எடுத்துள்ளார். இதன்படி இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்டது.

மேலும் கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 .. ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து, 2000 வங்கி கணக்குகளை முடக்கிய போலிஸ்!

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நடந்த ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கிக் கணக்குகளை போலிஸார் முடக்கியுள்ளனர். மேலும் 2000 வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள், பணம் ஆகியவற்றை போலிஸார் முடக்கியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories