இந்தியா

பாலியல் வழக்கில் சிக்கிய சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி தண்டனை வழங்கலாம் - நீதிமன்றம் உத்தரவு !

பாலியல் வழக்கில் சிக்கிய சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி தண்டனை வழங்கலாம் என நீதிமன்றன் உத்தரவிட்டுள்ளது

பாலியல் வழக்கில் சிக்கிய சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி தண்டனை வழங்கலாம் - நீதிமன்றம் உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த மே 28-ம் தேதி, 17 வயது சிறுமியொருவர், தனது நண்பருடன் பார்ட்டியொன்றுக்கு சென்றுள்ளார். அப்போதுஅங்கிருந்த சிலர் அச்சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறிவிட்டு, மறைவான ஓர் இடத்திற்கு அச்சிறுமையை கடத்திச்சென்று, அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 6 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது. இந்த ஆறு பேரில் ஐந்து பேர் 18 வயது நிரம்பாதவர்கள். இவர்களில் ஒரு சிறுவன், எம்.எல்.ஏ ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் அந்த எம்.எல்.ஏ தன் மகனுக்கும் இந்த குற்றத்துக்கும் தொடர்பில்லை எனக் கூறிய நிலையில், பின்னர் அது நிரூபிக்கப்பட்டதால், காவல்துறையினர் அச்சிறுவனின் பெயரையும் குற்றவாளிகள் பெயரில் சேர்த்துக் கொண்டனர்.

பாலியல் வழக்கில் சிக்கிய சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி தண்டனை வழங்கலாம் - நீதிமன்றம் உத்தரவு !

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த ஐந்து பேரில் நான்கு பேரை, பெரியவர்களாகக் கருத்தில் கொண்டு விசாரணையை தொடரலாம் என ஐதராபாத் சிறார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

சிறார் நீதிச்சட்டம் 2015-ம் திருத்தச் சட்டத்தின்படி, 16 வயதை தாண்டிய சிறுவர்கள் எவரேனும் கொடூரமான குற்றத்தை செய்திருந்தால், அவர்களை பெரியவர்களாக கருத்தில் கொண்டு விசாரணை நடத்தலாம் என்ற சட்டப்பிரிவை பயன்படுத்தி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories