தமிழ்நாடு

“முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை” : சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு !

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தடை இல்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை” : சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அவற்றில் நடவடிக்கை எடுகவில்லை என உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன

பின்னர் சென்னை மற்றும் கோவை பிரிவுகளால் தலா ஒரு வழக்கு என 2021, 2022ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டது. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் இந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,

2018ல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல் வழக்கு இந்த அமர்வுக்கு மாற்றப்பட்டது குறித்த விவரங்களை விளக்கினர். இதையடுத்து, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு தடை இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories