
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்தில் பதிவு செய்திருந்தனர். அதன்படி நேற்று இரவு சேலத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஆம்னி பேருந்து நள்ளிரவில் பெத்தநாயக்கன் பாளையத்தை வந்தடைந்தது.
அப்போது திருநாவுக்கரசு குடும்பத்தினர், தங்களது போர்டுகளை பேருந்தில் ஏற்றுவதற்கு ஒரு பெட்ரோல் பங்க் அருகே ஆம்னி பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று பேருந்தின் வலது பக்கம் மோதியது.

இதில் அந்த பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து கிளீனர். திருநாவுக்கரசு உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த திருநாவுக்கரசின் மனைவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அதோடு 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

பின்னர் தகவலறிந்து காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு வழக்குப்பதிவு செய்து, பேருந்தை இடித்து சென்று தலைமறைவாக இருக்கும் லாரில் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த கோர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








