தமிழ்நாடு

“இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது” : ABVP வழக்கை தள்ளுபடி செய்து குட்டு வைத்த ஐகோர்ட்!

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது” : ABVP வழக்கை தள்ளுபடி செய்து குட்டு வைத்த ஐகோர்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சை மாவட்டத்தில் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மேலும் மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தின் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கியும், உடைகளை கிழித்தும், காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்வரி புகார் அளித்தார்.

அந்த புகாரில் ஏ.பி.வி.பி. அமைப்பை சேந்த் 35க்கும் மேற்பட்டோர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகள் மற்றும் பொது சொத்து சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கௌசிக், உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சிதா உள்ளிட்ட 31 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர்களது மனுவில் மற்றொரு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர் என்ற முறையில் போராடியதாகவும், முதல்வரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே தங்களது நோக்கமாக இருந்ததாகவும், ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories