தமிழ்நாடு

அ.தி.மு.க பிரமுகர் இல்ல பேனர் விழுந்து இளம் பெண் படுகாயம்: போளூர் அருகே நடந்த சோகம் - போலிஸார் விசாரணை!

போளூர் அருகே அ.தி.மு.க பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்ட பலகை இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது விழுந்ததில் பெண் பலத்த படுகாயமடைந்து போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க பிரமுகர் இல்ல பேனர் விழுந்து இளம் பெண் படுகாயம்:  போளூர் அருகே நடந்த சோகம் - போலிஸார் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே மொடையூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் பாபு என்பவரின் மகள் மணமகள் அனிதப் பிரியாக்கும் பார்த்திபன் என்கின்ற மணமகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமண விழாவிற்கு போளூர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளார். அ.தி.மு.க ஒன்றிய அவைத் தலைவர் பாபு, அ.தி.மு.க எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வரவேற்பதற்காக தேவிகாபுரம் போளூர் நெடுஞ்சாலையில் எம்.எல்.ஏ-வை வரவேற்க பேனர் மற்றும் அ.தி.மு.க கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

அ.தி.மு.க பிரமுகர் இல்ல பேனர் விழுந்து இளம் பெண் படுகாயம்:  போளூர் அருகே நடந்த சோகம் - போலிஸார் விசாரணை!

இந்நிலையில், தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தவேலின் மனைவி ரம்யா (29) என்பவர் தேவிகாபுரத்தில் இருந்து போளூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, மொடையூர் கிராமத்தில் அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் திருமணத்திற்கு வைக்கப்பட்ட பேனர் ரம்யா மீது விழுந்து ரம்யா பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து காயமடைந்த ரம்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் போளூர் அரசு மருத்துவமனையில் அனுபவித்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போளூர் காவல் நிலைய போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

போளூர் அருகே அ.தி.மு.க பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகை இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories