தமிழ்நாடு

"தி.மு.கதான் உண்மையான திராவிட இயக்கம்".. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி!

தி.மு.கதான் உண்மையான திராவிட இயக்கம் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

"தி.மு.கதான் உண்மையான திராவிட இயக்கம்".. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.கதான் உண்மையான திராவிட இயக்கம். அ.தி.மு.கவில் இருப்பவர்கள் விரைவில் தி.மு.கவில் இணைவார்கள் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, " தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய பொய்யால், அ.தி.மு.க-வினர் குழப்பத்தில் உள்ளனர்.

"தி.மு.கதான் உண்மையான திராவிட இயக்கம்".. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி!

எடப்பாடி பழனிச்சாமியுடன் தொடர்பில் இருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டால் தன்னோடு தொடர்பில் உள்ள அ.தி.மு.க-வினரின் பெயரைத் தாமும் வெளியிடத் தயாராக உள்ளேன்.

50 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், 30 மாவட்டச் செயலாளர்கள், 2 எம். பி.க்கள் தி.மு.க-வுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் விரைவில் தி.மு.கவில் இணைவார்கள்.

"தி.மு.கதான் உண்மையான திராவிட இயக்கம்".. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி!

தி.மு.கதான் உண்மையான திராவிட இயக்கம் என்பதை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள எல்லா தமிழரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ராகுலின் நடைபயணம் பா.ஜ.க-விற்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories