தமிழ்நாடு

குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க.. ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு முதல்வர் வாழ்த்து!

ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க.. ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு முதல்வர் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி.

இந்த நடை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில், அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள், இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்க, நமது குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க, நாட்டு மக்களை அன்பால் ஒன்றிணைப்பதற்கான பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறார்.

குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க.. ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு முதல்வர் வாழ்த்து!

சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரிமுனையைக் காட்டிலும் இந்த "இந்திய ஒற்றுமைப் பயண"த்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது.

மதத்தால் பிளவுபடுத்தலும், கேடு விளைவிக்கும் வெறுப்புப் பரப்புரைகளும் மக்களின் மனங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவை ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரும்பணியை நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுத்துள்ளது.

பெருமைமிகு நமது குடியரசை மீண்டும் கண்டெடுக்கும் தனது நோக்கத்தில் "இந்திய ஒற்றுமைப் பயணம்" வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனதெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories