தமிழ்நாடு

விற்பனைக்கு வந்த ஆவினின் 10 புதிய பொருட்கள்.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?: உங்களுக்கான முழு விவரம் இதோ!

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் 10 புதிய பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கிவைத்தார்.

விற்பனைக்கு வந்த ஆவினின் 10 புதிய பொருட்கள்.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?: உங்களுக்கான முழு விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி அமைந்ததிலிருந்து ஆவின் நிறுவனத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தின் சார்பில் குடிநீர் பாட்டில் விற்பனை விரைவில் தொடங்க உள்ளோம் என அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் Cold Coffee, பலாப்பழ ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், வெண்ணெய் கட்டி, பாசந்தி, ஆவின் வெண்ணெய் குறுக்கு உள்ளிட்ட 10 புதிய பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இன்று 10 புதிய பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்து விற்பனையைத் தொடங்கிவைத்தார். அந்த புதிய பொருட்கள் என்ன?. அதன் விலைகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

1. பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream) 125மி.லி - ரூ.45

2. வெள்ளை சாக்லேட் (White Chocolate ) - 45 கிராம் - ரூ.30

3. குளிர்ந்த காஃபி (Cold Coffee) - 200 மி.லி - ரூ.35

4. வெண்ணெய் கட்டி (Butter Chiplets) - 200 கிராம் - ரூ.130

5. பாசுந்தி (Basundi) - 100 மி.லி - ரூ.60

விற்பனைக்கு வந்த ஆவினின் 10 புதிய பொருட்கள்.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?: உங்களுக்கான முழு விவரம் இதோ!

6. ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix) - 250 கிராம் - ரூ.120

7. பாலாடைக்கட்டி (Processed Cheese ) - 200 கிராம் - ரூ.140

8. அடுமனை யோகர்ட் (Baked Yoghurt) - 100 கிராம் - ரூ.50

9. ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit) -75 கிராம் - ரூ.12

10.ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku ) - 200 கிராம் - ரூ.80

banner

Related Stories

Related Stories