தமிழ்நாடு

‘கட்சி பேரு போடாம போஸ்டர் அடிப்போம் தலைவரே’ : பித்தலாட்ட வேலையை வெளிப்படையாக ஒத்துக்கொண்ட பாஜக நிர்வாகி !

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை விமர்சித்து பொதுமக்களே போஸ்டரை ஒட்டுவது போல காட்ட பாஜக செய்த தில்லுமுல்லு தற்போது வெளிவந்துள்ளது.

‘கட்சி பேரு போடாம போஸ்டர் அடிப்போம் தலைவரே’ : பித்தலாட்ட வேலையை வெளிப்படையாக ஒத்துக்கொண்ட பாஜக நிர்வாகி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மதுரையில் உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கட்சிக் கொடியுடன் கூடியிருந்த பா.ஜ.க.வினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும் இராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செய்திடும் அரசு நிகழ்ச்சியில் கட்சி நிகழ்ச்சியைப் போன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்? என அமைச்சர் கேள்வி எழுப்பிட, உடனே அங்கிருந்த பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர்.

அமைச்சர் இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும்போது அங்கு கூடி இருந்த பா.ஜ.க-வினர் அவரது காரின் மீது செருப்பு வீசியும், கார் கண்ணாடிகளை அடித்தும் தாக்குதலை நடத்தினர். இந்த சம்பவம் நேற்று பெரும் சர்ச்சையான நிலையில், பலரும் இந்த செயலுக்கு பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் கார் மீது செருப்பை வீசி தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘கட்சி பேரு போடாம போஸ்டர் அடிப்போம் தலைவரே’ : பித்தலாட்ட வேலையை வெளிப்படையாக ஒத்துக்கொண்ட பாஜக நிர்வாகி !

பா.ஜ.க-வினரின் இந்த செயலுக்கு பல்வேறு தலைவருகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க-வினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு எச்சரிக்கையும் விடுத்தார்.

இதனிடையே மதுரை பா.ஜ.க மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் நிதியமைச்சரின் இல்லத்தில் அமைச்சரை சந்தித்து நிகழ்வுக்கு மன்னிப்பு கோரினார். பின்னர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓராண்டு முன் பா.ஜ.க.வில் சேர்ந்தேன், பா.ஜ.க சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர், அதையும் பொறுத்துக்கு கொண்டு நான் பா.ஜ.க.வில் பயணித்தேன், அமைச்சர் கார் மீதான தாக்குதல் எனக்கு மன உளைச்சலை உண்டாக்கியது. எனக்கு தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவு நிதியமைச்சரை சந்தித்தேன்.பா.ஜ.க.வின் பதவியை விட மன அமைதி மிக முக்கியமானது. பா.ஜ.க.வில் உறுதியாக நான் தொடர மாட்டேன். பா.ஜ.கவின் மத, வெறுப்பு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை ஆகவே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் டாக்டர் சரவணன் பா.ஜ.க அணி ஒருவரிடம் பேசியதாக ஒரு விடீயோவை வெளியிட்டுள்ளார். அதில் காமிச்சார் பழனிவேல் தியாகராஜனை விமர்சித்தும், அவர் பதவி விலகுமாறு போஸ்டர் ஒட்டுமாறும் கூறியுள்ளனர். மேலும் இதை பா.ஜ.க செய்வதை போல இல்லாமல் பொதுமக்கள் செய்வது போல காட்ட போஸ்டரை பொதுமக்களே ஒட்டியதாக கூறுவதும் பதிவாகியுள்ளது. இதன் மூலம் பித்தலாட்ட வேலையை பா.ஜ.க நிர்வாகியே வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விடியோவை பகிர்ந்து பலர் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories