தமிழ்நாடு

சென்னை விமானநிலையத்தில் ராஜநாகங்கள்.. அதிர்ந்த அதிகாரிகள்.. பின்னர் நடந்தது என்ன?

சென்னை விமானநிலையத்துக்கு வந்த விமானத்தில் ராஜநாகங்கள், குரங்குகள், மலைப்பாம்புகள் இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமானநிலையத்தில் ராஜநாகங்கள்.. அதிர்ந்த அதிகாரிகள்.. பின்னர் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் உள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களாக சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 5 விமான நிலையங்கள் அமைந்துள்ளன. இதில் தென்னிந்தியாவின் நுழைவு விமான நிலையமான சென்னை விமானநிலையம் அமைந்துளது.

இங்கு தினந்தோறும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் இடவசதி குறைவால் சென்னைக்கு வெளியே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது வேகம் எடுத்துள்ளது.

சென்னை விமானநிலையத்தில் ராஜநாகங்கள்.. அதிர்ந்த அதிகாரிகள்.. பின்னர் நடந்தது என்ன?

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று வந்துள்ளது. அதை விமானநிலைய அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்தனர்.

அப்போது அதில், ராஜநாகங்கள், குரங்குகள், மலைப்பாம்புகள் போன்ற விலங்குகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவற்றை அதே விமானத்தில் மீண்டும் பாங்காக்கிற்கே திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories