தமிழ்நாடு

திடீரென எழுந்த ராட்சத அலை.. படகோடு தூக்கி வீசப்பட்ட குமரி மீனவர் - மனதை பதைபதைக்கும் காட்சி! (Video)

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மின் பிடி துறைமுகத்தில் இருந்து மின் பிடிக்க சென்ற பைபர் படகு கவிழ்ந்து விபத்து மீனவர் ஒருவர் கடலில் குதித்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

திடீரென எழுந்த ராட்சத அலை.. படகோடு தூக்கி வீசப்பட்ட குமரி மீனவர் - மனதை பதைபதைக்கும் காட்சி! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதியான மாடலாம் முதல் நிரோடி வரை 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு துறைமுகம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம்.

இந்த துறைமுகத்தில் மணல் திட்டு ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் இதுவரை 14 மீனவர்கள் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் மட்டும் நான்கு விபத்துகள் நடந்துள்ளது.

இதைபோல் இன்று மீன்பிடிக்க சென்ற பைபர் படகு ஒன்று ராட்சத அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அந்த மீனவர் துாக்கிவீசப்பட்ட நிலையில், சக மீனவர்கள் உதவியுடன் நீந்தி கரை சேர்ந்து உள்ளர்.

தற்போது சிறுகாயங்களுடன் வீடு திரும்பிய நிலையில் துறைமுகத்தின் முகதுவராத்ததை ஆழப்படுத்தி மீனவர் உயிரை காப்பாற்ற மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories