தமிழ்நாடு

3 வயது குழந்தையை கொன்ற 13 வயது சிறுவன்.. தந்தை அதிரடி கைது ! - பின்னணி என்ன ?

13 வயது சிறுவன் பைக் ஓட்டி, 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 வயது குழந்தையை கொன்ற 13 வயது சிறுவன்..  தந்தை அதிரடி கைது ! - பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இன்று காலை இவரது 3 வயது மகள் சாலையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த பைக், அந்த சிறுமியின் மீது மோதி, தரதரவென இழுத்து சென்றது. இதில் படுகாயமடைந்த அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

3 வயது குழந்தையை கொன்ற 13 வயது சிறுவன்..  தந்தை அதிரடி கைது ! - பின்னணி என்ன ?

இதனால் ஆவேசமடைந்த சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் அந்த சிறுவனை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பைக்கில் வந்த சிறுவனுக்கு வெறும் 13 வயது என்றும், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் இவர் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு என்பவற்றின் மகன் என்றும், அந்த சிறுவனுக்கு வாகன ஓட்டும் உரிமை இல்லை என்றும் தெரியவந்தது.

3 வயது குழந்தையை கொன்ற 13 வயது சிறுவன்..  தந்தை அதிரடி கைது ! - பின்னணி என்ன ?

இதையடுத்து இந்த சம்பவத்தை ஐ.பி.சி.302 (கொலை அல்லாத மரணம்) என்ற வழக்கில் பதிவு செய்த அதிகாரிகள், சிறுவனையும், சிறுவனுக்கு பைக் ஓட்டுவதற்கு அனுமதி அளித்து, அவரிடம் வாகனத்தை கொடுத்த குற்றத்திற்காக சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவன் பைக் ஓட்டி, குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories