தமிழ்நாடு

“பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் கலைஞர்..” : கலைஞரை நினைவுகூறும் பழங்குடியினர்கள் !

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிய கலைஞரை நினைவுகூறும் பழங்குடியினர்கள்

“பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் கலைஞர்..” :   கலைஞரை நினைவுகூறும் பழங்குடியினர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், குறும்பர், கொத்தர், காட்டுநாயக்கர், பணியர், முள்ளு குரும்பர் என 7 விதமான பழங்குடியினர்கள் ஒட்டுமொத்தமாக நீலகிரி மலைத்தொடரில் 27,640 பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் ஒவ்வொரு பழங்குடியினர் மக்களுக்கும் தனி கலாச்சாரம் இசை, நடனம் என தனித்தனியாக வாழக்கூடியவர்கள். இவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மின்சாரம் இல்லாமல் இருளில் வாழ்ந்து வந்தனர். இதனால் இவர்கள் குழந்தைகள் கல்வி கற்காமல் ஆறாம் வகுப்பு க்கும் குறைவாகவே படித்து வந்தனர்.

இந்நிலையில் 2006ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் மறைந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் இலவச வண்ண தொலைக்காட்சி திட்டத்தை அறிவித்து உடன் நீலகிரியில் மட்டுமின்றி தமிழ் நாட்டில் வாழக்கூடிய அனைத்து பழங்குடியின மக்களுக்கு மின்சார இணைப்பு வழங்கி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

“பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் கலைஞர்..” :   கலைஞரை நினைவுகூறும் பழங்குடியினர்கள் !

இந்த உத்தரவினால் நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களுக்கும் நீண்ட தூரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் மின்கம்பங்கள் நட்டப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் ஆட்சியில் 2006ம் ஆண்டு காலக்கட்டத்தில் இருளில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு இருளை விலக்கி மின்சாரத்தை வழங்கி ஒளி தந்தவர் கலைஞர்.

அவ்வாறு கலைஞர் அன்று செய்த சாதனையின் காரணமாக தற்போது நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவ மாணவிகள் கல்வி கற்கத் தொடங்கினர். அதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி 30 துவங்கப்பட்டு, அதில் தற்போது 2447 பழங்குடியினர் மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர் செய்த அந்த சாதனையின் காரணமாக இன்று பழங்குடினர் குழந்தைகள் கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதை பழங்குடியின மக்கள் பழங்குடியினர் தினமான இன்று நினைவு கூறுகின்றனர்.

banner

Related Stories

Related Stories