தமிழ்நாடு

வேலைக்கு போகாமல் வீட்டில் 3 மாதம் கஞ்சா செடி வளர்த்த வட இந்தியர்.. கைது செய்த போலிஸ்!

கோவையில் கஞ்சா செடி வளர்த்த வட இந்தியரை போலிஸார் கைது செய்தனர்.

வேலைக்கு போகாமல் வீட்டில் 3 மாதம் கஞ்சா செடி வளர்த்த வட இந்தியர்..  கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம், கணேசபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது வட இந்திய இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பதை போலிஸார் கண்டனர். உடனே அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்தபோது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபீன்ந்தர பரிடா என தெரியவந்தது.

வேலைக்கு போகாமல் வீட்டில் 3 மாதம் கஞ்சா செடி வளர்த்த வட இந்தியர்..  கைது செய்த போலிஸ்!

மேலும் ரபீன்ந்தர பரிடா 7 ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இதில் அவருக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை. இதனால் அவர் தான் தங்கியுள்ள வீட்டின் அருகே கஞ்சா செடியை வளர்த்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

வேலைக்கு போகாமல் வீட்டில் 3 மாதம் கஞ்சா செடி வளர்த்த வட இந்தியர்..  கைது செய்த போலிஸ்!

இதையடுத்து போலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கஞ்சா செடி இருந்தை உறுதி செய்தனர். பின்னர் போலிஸார் அந்த கஞ்சா செடியை அழித்தனர். பிறகு வட இந்தியர் ரபீந்த்ர பரிடாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories