தமிழ்நாடு

மாநில முதல்வர்களும் கொடியேற்றலாம்.. உரிமை பெற்றுக்கொடுத்த கலைஞர்.. DP-யாக வைத்த முதலமைச்சர் !

கோட்டையில் முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றிய கலைஞரின் புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முகப்படமாக வைத்துள்ளார்.

மாநில முதல்வர்களும் கொடியேற்றலாம்.. உரிமை பெற்றுக்கொடுத்த கலைஞர்.. DP-யாக வைத்த முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தின் மீது அமைந்துள்ள உயர்ந்த கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றவுள்ளார். அதேநாளில் இந்தியா முழுக்க அம்மாநில முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றுவார்கள்.

இப்போது சாதாரண நிகழ்வாக இருக்கும் இது ஒரு காலத்தில் அசாதாரணமாக இருந்தது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு கிடைத்த இந்த உரிமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் போராட்டத்தின் காரணமாக கிடைத்தது என்பதும் பலருக்கு தெரியாது.

மாநில முதல்வர்களும் கொடியேற்றலாம்.. உரிமை பெற்றுக்கொடுத்த கலைஞர்.. DP-யாக வைத்த முதலமைச்சர் !

மாநில உரிமை குறித்த விவகாரத்தில் தீவிரமாக செய்யப்பட்டு வந்த தி.மு.க 1970 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கென்று தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் முன்வைத்தார்.

திமுகவின் இந்த கோரிக்கைக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே வந்தது. பின்னர், இது குறித்து பேசிய பிரதமர் இந்திரா காந்தி, தமிழ்நாடு அரசின் தனிக்கொடி கோரிக்கையை எந்தவித பரிசீலனையும் இல்லாமல் உடனடியாக நிராகரிக்கவேண்டும் என்று சில தலைவர்கள் கூறுகிறார்கள். அப்படிச் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், தனிக்கொடி விஷயத்தில் இந்தியாவின் தேசிய கெளரவம் ஏதும் பாதிக்கப்பட்டுவிட்டதாக அரசு கருதவில்லை. என்றாலும், இதுபற்றி மற்ற மாநிலங்களின் கருத்துகளையும் கேட்க வேண்டியது அவசியம் என்றார்.

இந்த விவகாரம் சற்று அடங்கிய நிலையில், சுதந்தர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்குத் தரவேண்டும் என 1974 பிப்ரவரியில் கோரிக்கை விடுத்தார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர்.

மாநில முதல்வர்களும் கொடியேற்றலாம்.. உரிமை பெற்றுக்கொடுத்த கலைஞர்.. DP-யாக வைத்த முதலமைச்சர் !

குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரும், சுதந்தர தினத்தன்று பிரதமரும் தேசியக் கொடி ஏற்றி வைப்பது போல, குடியரசு தினத்தன்று மாநில ஆளுநரும் சுதந்தர தினத்தன்று மாநில முதல்வரும் கொடியேற்றலாம் எனற வாதத்தை கலைஞர் முன்வைத்தார்.

கலைஞரின் யோசனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டிய நிலையில், சற்று எதிர்ப்பு இருந்தாலும் கலைஞரின் இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுதந்தர தினத்தன்று மாநில முதல்வர்கள் கொடியேற்றலாம் என்ற ஆணையை வெளியிட்டார்.

அதன்படி 1974 ஆகஸ்டு 15 தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் சுதந்தர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றுவதற்கான உரிமைக்குரல் தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் ஒலித்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் மு.கருணாநிதி. அப்படி மு.கருணாநிதி முதன்முறையாகத் தேசியக்கொடியை ஏற்றிவிட்டுத் திரும்பும்போது எடுத்த புகைப்படத்தைத்தான் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முகப்படமாக வைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories