தமிழ்நாடு

“மனிதப் பிறப்பின் நோக்கம் என்ன? - ஏன் மனிதனுக்கு காரணம் தேவைப்படுகிறது?” : தெரிந்துகொள்ள இதை பாருங்கள் !

நாம் காதலித்தாலும் காரணம் தேவை. காதலிக்கவில்லை என்றாலும் காரணம் தேவை. ஆனால் மயிலுக்கு தோகையை விரித்து ஆடினால் போதும்.

“மனிதப் பிறப்பின் நோக்கம் என்ன? - ஏன் மனிதனுக்கு காரணம் தேவைப்படுகிறது?” : தெரிந்துகொள்ள இதை பாருங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மனிதப் பிறப்பின் நோக்கம் என்ன?

பல்லாண்டுகளாக மனிதனை துளைக்கும் கேள்வி இது. இக்கேள்விக்கு பதிலளிக்கவென மனிதன் பல பேசியிருக்கிறான். கருதுகோள்களை உருவாக்கி இருக்கிறான். எழுதியிருக்கிறான். இதைக் காட்டிலும் சுவாரஸ்யமூட்டும் இன்னொரு கேள்வி இருக்கிறது.

மனிதப் பிறப்புக்கு ஏன் நோக்கம் இருக்க வேண்டும்?

நம்மை சுற்றி இருக்கும் எதற்குமே நோக்கம் ஏதும் தேவையில்லை. Purpose வேண்டாம். Reason வேண்டாம். எந்த காரண காரியமும் இல்லாமலேயே இப்பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமும் இயங்கும் மனிதனை தவிர.

மனிதனுக்கு மட்டும்தான் காரணம் தேவைப்படுகிறது.

நாம் காதலித்தாலும் காரணம் தேவை. காதலிக்கவில்லை என்றாலும் காரணம் தேவை. ஆனால் மயிலுக்கு தோகையை விரித்து ஆடினால் போதும்.

ஏன் மனிதனுக்கு மட்டும் காரணம் தேவைப்படுகிறது?

மனிதன் படைப்பாற்றலை பெறுவதிலிருந்து பரிணாமம் கொள்கிறான். குகை ஓவியங்களில் தகவல் சேமிக்க தொடங்கி, வரலாறு என்ற மொத்த மனித நனவையும் சுமக்கும் லாவகமும் சாத்தியமும் மனிதனுக்கு நேர்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் விலங்குகளின் உள்ளுணர்வு மனிதனுக்கு குறையத் தொடங்கி, அவன் உருவாக்கும் சமூக உணர்வு மேலோங்க தொடங்குகிறது. இயற்கையிடமிருந்து விலகத் தொடங்குகிறான். அந்நியமாகுகிறான்.

உயிர்களுக்கென இயற்கை கட்டி வைத்த உள்ளுணர்வு மனிதன் கட்டியெழுப்பிய சமூக உணர்வுடன் இயையாமல் துண்டு துண்டாகி மனம் என்ற ஒரு படிமத்தை உருவாக்கி, அதுவே தன்னை இயக்குவதாக மனிதன் கற்பனை செய்து, அதிலிருந்து மீள முடியாமல் போகும்போது சமூக உணர்வுக்கும் தகவமைக்கும் போக்கு உட்புகுந்து ஒரு பெரும் களேபரத்துக்குள் நாம் நிறுத்தப்பட்டோம்.

அங்கு தொடங்கி இன்று வரை நமக்கு சிதை சிந்தை எப்போதும் உண்டு. அதன் விளைவாகவே கடவுள்களை உருவாக்குகிறோம். பழையது என்றாலும் முக்கியமான காரணம், புழுவாக பூச்சியாக மண்ணோடு மண்ணாகும் உண்மை நமக்கு உவப்பாக இல்லை. மனிதப் பரிணாமத்துக்கே இருக்கும் அகங்காரம் அவ்வளவு சுளுவாக அழிந்து போகும் உயிராக மனிதப் பிறப்பை கருத விரும்பவில்லை. அதனாலேயே தனிச்சிறப்பை சூடிக் கொள்ள விரும்புகிறது.

பிற உயிர்களை படைக்கவெல்லாம் கடவுள் சிரத்தை எடுத்திருக்க மாட்டார். மனிதனுக்கு மட்டும்தான் படைத்த கதை இருக்கும். எங்காவது ரயில் பூச்சி படைக்க கடவுள் எடுத்த சிரத்தை வேதமாகி பார்த்திருக்கிறீர்களா? ஒருவேளை ரயில்பூச்சிகளின் வாழ்க்கைகளில் இருக்கலாம். ஆனால் நம் வேதங்களில் நாம் மட்டுமே ஹீரோ. அ

தே போல், செத்தாலும் எங்கோ நசித்து நாசமாய் போகும் பூச்சியாய் இல்லாமல், நமக்கு மட்டும்தான் சொர்க்கம் உண்டு, நரகம் உண்டு. எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக மறுபிறப்பு உண்டு. விபத்தில் துண்டாகி போன கைக்கும் மறுபிறப்பு உண்டா என கேட்காதீர்கள். அதெல்லாம் out of portion.

So simple ஆக, மனித பயமும் மனித அகங்காரமும் இயற்கை விலகலும் எக்குத்தப்பான கலவையில் கலந்ததன் விளைவே கடவுள். பூமியின் எல்லா உயிர்களைக் காட்டிலும் அறிவு நிறைந்தவன் என நிறுவவே மனிதன் நோக்கத்தை தேடுகிறான்.

உண்மையில் நாமும் நம் வாழ்க்கைகளும் காற்றில் கூடி பின் கலைந்தோடும் மேகங்கள் மட்டுமே இப்பிரபஞ்சத்துக்கு!

banner

Related Stories

Related Stories