தமிழ்நாடு

“காட்டுத் தீ.. 76,000 ஏக்கர் வனம் எரிந்து நாசம்”: மனித குலத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் காலநிலை மாற்றம்!

கார்பன் வெளியீடு குறைக்கப்பட்டாலுமே கூட காலநிலை மாற்றம் அடைந்துவிட்ட தூரத்தை குறைக்க முடியாது.

“காட்டுத் தீ.. 76,000 ஏக்கர் வனம் எரிந்து நாசம்”: மனித குலத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் காலநிலை மாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

கடந்த ஒரு வாரமாக கலிஃபோர்னியா எரிந்து கொண்டிருக்கிறது.

கலிஃபோர்னியாவின் ஆளுநர் நெருக்கடி நிலை அறிவித்திருக்கிறார்.

சிஸ்கியூ கவுண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய காட்டுத் தீ இதுவரை 21,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு பரவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை 22ம் தேதி கலிஃபோர்னியாவின் மிட்பைன்ஸ் டவுனிலிருந்து காட்டுத் தீ தொடங்கியது. அந்த வார இறுதியிலேயே தீயின் அளவு பெருகியது. ஏற்கனவே அடித்த வெயிலில் காய்ந்து போன காடுகளினூடாக தீ பற்றி வேகம் எடுத்தது. அடுத்தடுத்த சில தினங்களில் வெயில் ஓரளவுக்குக் குறைந்ததால் தீ அணைப்பு வீரர்கள் தங்களின் பணியை செய்ய முடிந்தது.

10 சதவிகித அளவுக்கு தீயை அணைக்க முடிந்தது. ஆனாலும் தீ ஓயவில்லை. இந்த நிமிடம் வரை 19,244 ஏக்கர்களை தீ விழுங்கியிருக்கிறது. 3,000 பேர் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப் பட்டிருந்தனர். இப்போது 70 சதவிகிதம் வரை தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அடுத்த வாரத்தின் வெள்ளிக்கிழமையில் அடுத்த காட்டுத் தீ தொடங்கியிருக்கிறது.

“காட்டுத் தீ.. 76,000 ஏக்கர் வனம் எரிந்து நாசம்”: மனித குலத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் காலநிலை மாற்றம்!

கடந்த ஜூலை 29ம் தேதி சிஸ்கியூ கவுண்ட்டியில் காட்டுத் தீ தொடங்கி பரவிக் கொண்டிருக்கிறது. இதுவரை 55,493 ஏக்கர்கள் எரிந்து நாசமாகி இருக்கிறது.

இந்த இரண்டு காட்டுத் தீக்களுக்கும் முன்பாக ஜூலை 7ம் தேதியும் வாஷ்பர்ன் என்றவொரு காட்டுத் தீ கிளம்பி 4,886 ஏக்கர்களை நாசமாக்கி அடங்கியது.

மூன்று காட்டுத் தீச்சம்பவங்களிலும் பெரும் காட்டுத் தீயாக தற்போதைய மெக்கின்னி காட்டுத் தீ மாறிக் கொண்டிருக்கிறது.

வேகமாக வளரும் காட்டுத் தீ எழுப்பு புகை மண்டலங்கள் மேகங்களுடன் கலந்து இடிகள் விழுகின்றன. அவையும் தம் பங்குக்கு கூடுதலாக காட்டுத் தீயைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. மெக்கின்னி காட்டுத் தீ, சிஸ்கியூ கவுண்ட்டியின் க்ளமத் காப்புக் காட்டில் உலர்மரங்களை எரிக்க முற்பட்ட தீயால் உருவானதாக சொல்லப்படுகிறது. நெடுஞ்சாலையில் காரில் சென்ற இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

“காட்டுத் தீ.. 76,000 ஏக்கர் வனம் எரிந்து நாசம்”: மனித குலத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் காலநிலை மாற்றம்!

தொடரும் காட்டுத் தீ சம்பவங்களுக்குக் காரணமாக கொளுத்தும் வெயிலும் காய்ந்த காடுகளும் சொல்லப்படுகிறது. கலிஃபோர்னியாவில் இத்தகைய காட்டுத் தீ ஏற்படுவது முதல்முறையும் அல்ல.

கடந்த 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் கலிஃபோர்னியா வானையே சிவப்பு நிறத்துக்கு மாற்றுமளவுக்கு காட்டுத் தீ எரிந்திருக்கிறது. எனினும் இந்தக் காட்டுத் தீ சம்பவங்களை வழக்கமான சம்பவமாக கடந்து செல்ல முடியாது என்கின்றனர் அறிவியலாளர்கள்.

ஒவ்வொரு வருடமும் காட்டுத் தீ பரவும் பரப்பளவின் எண்ணிக்கையும் ஏற்படுத்தும் சேதத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்குப் பிரதானக் காரணமாக உயர்ந்து வரும் வெயிலின் அளவு முன் வைக்கப்படுகிறது.

“காட்டுத் தீ.. 76,000 ஏக்கர் வனம் எரிந்து நாசம்”: மனித குலத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் காலநிலை மாற்றம்!

தற்போதைய சூழலில் பூமி முழுவதும் கடந்த காலங்களில் இருந்த காலநிலை மாறியிருக்கிறது. புவிவெப்ப உயர்வு, கார்பன் அளவு அதிகரிப்பு ஆகியவை இம்மாற்றத்துக்குக் காரணமாக முன் வைக்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க ஒரு வழியை முன்வைக்கின்றனர் அறிவியலாளர்கள். கார்பன் வாயு சார்ந்த வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்கிறார்கள். அதாவது நிலக்கரி போன்ற புதைபடிமங்கள் எடுக்கக் கூடாது, பெட்ரோல் போன்ற புதைபடிம எரிபொருளை பயன்படுத்தக் கூடாது போன்றவை. கார்பன் வெளியீடு குறைக்கப்பட்டாலுமே கூட காலநிலை மாற்றம் அடைந்துவிட்ட தூரத்தை குறைக்க முடியாது. அப்படியே நிறுத்தி வேண்டுமானால் வைக்க முடியும்.

கார்பன் வெளியீட்டை நிறுத்தவில்லை என்றால்?

மனித குலம் அழியும்.

banner

Related Stories

Related Stories