தமிழ்நாடு

“மின் கட்டணம் பற்றி தவறான போலி தகவல்களை பரப்பும் அதிமுக-பாஜக கும்பல்” : உண்மையை அம்பலப்படுத்திய அமைச்சர்!

சமூக வலைத்தளங்களில் இல்லாத ஒரு மின் கட்டணத்தை இருப்பது போலவும், மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லதா இடங்களில் பாதிப்பு இருப்பது போலவும் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள்.

“மின் கட்டணம் பற்றி தவறான போலி தகவல்களை பரப்பும் அதிமுக-பாஜக கும்பல்” : உண்மையை அம்பலப்படுத்திய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக சென்னை, தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், சென்னை மாநகர மின் கட்டுபாட்டு மையம் மற்றும் 24 மணி நேர மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., இயக்குநர் (பகிர்மானம்) மா. சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- "தமிழ்நாட்டில் மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் வந்துவிடக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவின்படி சீரான மின் விநியோகம் வழங்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிச்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

“மின் கட்டணம் பற்றி தவறான போலி தகவல்களை பரப்பும் அதிமுக-பாஜக கும்பல்” : உண்மையை அம்பலப்படுத்திய அமைச்சர்!

நேற்று 14,433 மெகாவாட் என்று இருந்த மொத்த தமிழகத்தின் பயன்பாடு இன்று மழையின் காரணமாக 12,400 மெகாவாட் அளவிற்கு குறைந்திருக்கின்றது. இந்த 12,400 மெகாவாட்டில் 4,100 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலமும் சூரிய மின் உற்பத்தி 2,250 மெகாவாட் அளவிற்கும் உள்ளன. எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை மழையின் காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

காற்றாலைகளைப் பொறுத்தவரை ஒரு சிறப்பு முயற்சியாக ஒரு பாராட்டத் தக்க முயற்ச்சியாக முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாகவும், கடந்த 2020-21 ஆம் ஆண்டு 12,555 மில்லியன் யூனிட் உற்பத்தி என்பது 2021-22ஆம் ஆண்டு 13,120 மில்லியன் யூனிட் என்ற அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது.

அதேபோல சூரிய மின் உற்பத்தியைப் பொறுத்தவரை 2020-21ஆம் ஆண்டு 6,115 மில்லியன் யூனிட் என்பது 2021-22ஆம் ஆண்டு 7,203 மில்லியன் யூனிட் அளவிற்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தினுடைய தேவை என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரக்கூடிய இந்த சூழ்நிலையில் ஒட்டு மொத்த தேவையும் அதிகரிக்கின்றன. அதிலும், கடந்த 2020-21ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு அதற்கான மின் விநியோகம் முழுவதுமாக வழங்கப்பட்டு வருகின்றது.

“மின் கட்டணம் பற்றி தவறான போலி தகவல்களை பரப்பும் அதிமுக-பாஜக கும்பல்” : உண்மையை அம்பலப்படுத்திய அமைச்சர்!

கடந்த 2020-21 ஆம் ஆண்டு 1,06,943 மில்லியன் யூனிட் தமிழகம் முழுவதும் நுகர்வு செய்யப்பட்டிருகின்றது. அதில் 2021-22 ஆம் ஆண்டு அதிகபட்சமாக இதுவரை மின்சார வாரியம் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 1,17,261 மில்லியன் யூனிட்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருக்கின்றன.

மின் உற்பத்தி தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த பாதிப்பும் இல்லாமல் தமிழகத்தில் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தமாக ஒவ்வொரு மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எந்த அளவிற்கு மின் கட்டணங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது ஏற்கனவே தெளிவாக எடுத்துச் சொல்லிருக்கிறோம்.

சமூக வலைத்தளங்களில் இல்லாத ஒரு மின் கட்டணத்தை இருப்பது போலவும், மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லதா இடங்களில் பாதிப்பு இருப்பது போலவும் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். பொதுமக்கள் அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மின் கட்டணங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பக்கூடாது.

“மின் கட்டணம் பற்றி தவறான போலி தகவல்களை பரப்பும் அதிமுக-பாஜக கும்பல்” : உண்மையை அம்பலப்படுத்திய அமைச்சர்!

தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி வீடுகளுக்கான நிலைக்கட்டணம் முழுவதுமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மருக்கு போட வேண்டிய DT மீட்டர் பொருத்திய பின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடியும். DT மீட்டர் பொருத்துவதற்கு, டி.பி.ஆர் தயார் செய்யப்பட்டு, டெண்டர் விடப்படும் நிலையில் உள்ளது. DT மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டவுடன், ஸ்மார்ட் மீட்டர் பணிகள் தொடங்கப்படும்.

கேங் மேன் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால் பணிகளைப் பொறுத்தவரை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தற்போது சென்னை மாநகராட்சியும், மின்சார வாரியமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மின் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லை” என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories