தமிழ்நாடு

"கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு".. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு!

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடக் கல்வியில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டியுள்ளது.

"கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு".. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசின் வழிகாட்டலின் படி பள்ளி செல்லாமல் மற்றும் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்தக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

"கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு".. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு!

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி- நீதிபதி ஆனந்தி தலைமையிலான அமர்வு, "குழந்தை தொழிலாளர்களை மீட்கும் வேளை குடும்பமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குழந்தைகள் இடைநிற்றல் என்பது மிகப்பெரும் பிரச்சனை.

"கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு".. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு!

தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் கல்வியறிவில் சிறந்து விளங்குகிறது. இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனை. தமிழ்நாடு அரசு இடைநிற்றலைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி பள்ளி இடைநின்ற குழந்தைகளின் புள்ளி விபரங்கள் தொடர்பாகவும் அதனைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மனுதாரர் தரப்பில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories